விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தனது மனைவி ராதிகாவின் கர்ப்பத்தை வீட்டில் சொல்வாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்றைய எபிசோட்டில் அதற்கு முடிவு கிடைத்துள்ளது.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரி ஏதோ யோசித்துககொண்டிருக்க மறுமுனையில், ராமமூர்த்தி என்ன யோசை என்று விசாரிக்க, ஒன்றும் இல்லை என்று ஈஸ்வரி சொல்லிவிடுகிறாள். அப்போது ராதிகா தண்ணீர் எடுக்க வர, ஈஸ்வரியும் ராதிகாவும் முறைத்துக்கொள்கின்றனர். இதை பார்த்த ராமமூர்த்திக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.
அதன்பிறகு தனது வீ்ட்டுக்கு செல்லும் ராதிகா, தனது அம்மாவிடம் கோபி அவங்க அம்மாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டார். ஆனால் அவர் குழந்தை இப்போ வேண்டாம் என்று சொல்கிறார் என விஷயத்தை சொல்ல, அதை கேட்ட ராதிகாவின் அம்மா அந்த பொம்பளை என்ன நினைச்சிக்கிட்டு இருக்கு என்று சண்டைக்கு போக தயாராக, இப்போதைக்கு சண்டை வேண்டாம் என்று ராதிகா தடுத்துவிடுகிறாள்.
அதன்பிறகு கோபி, இந்த கர்ப்பம் தொடர்பான விஷயத்தை வீட்டில் சொல்லாதது குறித்து ராதிகா வருத்தப்பட, நீதானே இந்த ஆளை தேடி பிடித்து கல்யாணம் பண்ண, யார் சொன்னாலும் இந்த குழந்தையை நீ பெத்துக்கணும். அப்போ தான் கோபிக்கும் உனக்கும் ஒரு பிடிப்பு ஏற்படும் என்று ராதிகாவின் அம்மா ஏற்றிவிட, ராதிகாவும் அப்படியே செய்கிறேன் என்பது போல் இருக்கிறார்.
அதன்பிறகு வீட்டுக்கு வரும் கோபி, தனது அம்மாவின் அருகில் அமர, ஈஸ்வரி ஒன்றும் பேசாமல் இருக்கிறாள். இதனால் தனது ரூமுக்கு செல்லலாம் என்று கோபி மாடிக்கு செல்ல, ராதிகா சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. இதனால் அம்மாவுடன் இருப்பது தான் பாதுக்காப்பு என்று நினைக்க, அந்த நேரத்தில் சப்பாத்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஈஸ்வரியிடம் பாக்யா கேட்கிறாள்.
இங்கு என்ன நடந்துகிட்டு இருக்கு இவளுக்கு இது ரொம்ப முக்கியம் என்று நினைத்து அம்மாவிடம் வந்து அமர்கிறான். அப்போது வரும் ராதிகா வீட்டில் விஷயத்தை சொல்லங்க என்று சொல்ல, அவன் சொல்ல மாட்டான் என்று ஈஸ்வரி சொல்கிறாள். உடனடியாக ராதிகா இனியாவிடம் உங்க அப்பா உங்க எல்லார்கிட்டையும் ஒரு விஷயம் சொல்லனுமாம் எல்லாரையும் கூப்பிடு என்று சொல்ல, இனியாவும் அனைவரையம் கூப்பிடுகிறாள்.
அனைவரும் ஒன்று கூடியவுடன், கோபி விஷயத்தை சொல்ல, தயங்க, பாப் கார்ன் செய்த பாக்யா, சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு கோபி என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்போது கோபி தயங்குவதை பார்த்து, உங்க அப்பா சொல்ல வருவதை நான் சொல்கிறேன். உங்க அப்பா திரும்பவும் அப்பா ஆக போகிறார். உங்க அப்பாவின் வைஃப் கர்ப்பமாக இருக்காங்க என்று உண்மையை உடைக்கிறாள்.
இதை கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சியடைய, பாக்யாவின் மகன்களும் அதிர்ச்சியில் உறைகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“