scorecardresearch

Vijay Tv Serial: கோபியை உதறிவிட்டு வெளியேறிய பாக்யா; சிதறிய குடும்பம்!

நீங்க ஆசைபபட்ட வாழக்கையை சந்தோஷமா வாழுங்க. ஆனால அதையெல்லாம் பார்க்க ஒரு முட்டாள் பைத்தியக்காரியா இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் பழகி வந்த கோபி தற்போது வீட்டில் மாட்டிக்கொண்ட நிலையில், கோபியின் வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை என்று கூறி பாக்யா வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார்.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி.

கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய தோழியும் தனது முன்னாள் காதலியுமான ராதிகாவுடன் திருமணத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த விஷயங்களை எதுவும் தெரியாத பாக்யா கணவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்துகொள்கிறார்.

இதில் கடந்த வார தொடக்கத்தில் கோபி விபத்தில் சிக்கி ஹாஷ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டபோது மனைவி என்று சொல்லி ராதிகா  செய்த அனைத்தையும் தெரிந்துகொண்ட பாக்யா வீட்டிற்கு வந் கோபியிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை கேட்டு திணறடித்துவிட்டார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று கோபி விழித்துக் கொண்டிருக்கிறார் இதனிடையே கோபி அப்படியெல்லம் ஒன்றும் செய்திருக்க மாட்டான் என்று அவரது அம்மா ஈஸ்வரி ஸ்ராங்கான சொல்ல, கோபி பழக்குவது ராதிகாவுடன் தான் என்று பாக்யா இன் உண்மையை உடைக்க இருக்கிறார்.

அப்போதும் ராதிகாவை குற்றம் சொன்ன ஈஸ்வரிக்கு, கோபி தன்தைன டைவர்ஸ் வாங்க கோர்ட்டுக்கு கூட்டி சென்றதாக சொல்கிறாள். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியாக அடுத்து கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. இதை பார்த்து ஈஸ்வரி கோபியை கடுமைய திட்டுகிறார்.

அதன்பிறகு உங்களுக்கு இத்தனை மூனு வேளை சாப்பாடு, குளிக்கும்போது டவல், குளித்து முடித்தவுடன் ட்ரெஸ் அயன்பண்ணி வைக்கனும். இதெல்லாம் அப்போ செய்யும்போது ஒன்னும் தெரியல. ஆனா இப்போ நினைச்சா எதுக்குமே அர்த்தம்இல்லை என்று தோன்றுகிறது என்று பாக்யா ஃபீல் பண்ணி சொல்கிறார்.

அப்போது ஈஸ்வரி இனிமேல் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். ராதிகா கூட பேச மாட்டேனு சொல்லி பாக்யாகிட்ட மன்னிப்பு கெளுடா என்று கோபியிடம் சொல்கிறார். மேலும் நான் உன்னை கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போய் சத்தியம் செய்ய சொல்வேன் இனிமேல் ராதிகாவை பார்க்க கூடாது நேரத்துக்கு வீட்டுக்கு வந்திடனும் என்று சொல்கிறார்.

இதை கேட்ட எழில், அப்போது அம்மா பாக்யாவுக்கு ஆதரவாக பேச, ஈஸ்வரி பெரிய தப்புதான் எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதற்கு பாக்யா இந்த குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு வாழ தயார். ஆனால் அத்தை மாமா 3 பிள்ளைகள் எல்லாம் எங்கிருந்து வந்தது இவர் மனைவி என்ற ஸ்தானத்தால் வந்தது.

ஆனால் இப்போ அஸ்திவாரமே இல்லை என்று ஆகிவிட்டது. அப்புறம் எப்படி நான் இந்த வீட்டில் இருப்பேன் என்று பாக்யா சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார். நீ எங்கே போவ எங்கேயும் போக கூடாது ஜெனி பாக்யாவை கூட்டிக்கிட்டு உள்ளே போ என்று சொல்ல, அப்பா நல்லவர் இல்லம்மா என்று இனியா சொல்கிறாள.

அப்போது கோபியின் அப்பா நீ ஏன்மா வெளிய போகனும் அவன் வெளியே போகட்டும் என்று சொல்கிறார். அப்போது பாக்யா கோபியிடம் உங்களுக்கு என்னதான் பிரச்சினை, நான் இந்த வீட்டை விட்டு போய்டவானு எத்தனை முறை கேட்ருக்கேன், ஆனால் நீங்கள் சொன்ன பதில் எல்லமே அப்படி செய்தால் நனறாக இருக்கும் என்பது போலத்தான் இருந்தது.

அது ஏன்னு எனக்கு இப்போதான் புரியுது நீங்க ஆசைபபட்ட வாழக்கையை சந்தோஷமா வாழுங்க. ஆனால அதையெல்லாம் பார்க்க ஒரு முட்டாள் பைத்தியக்காரியா இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்று வீட்டை விட்டு கிளம்புகிறாள்.இதை பார்த்து அனைவரும் பின்னாடியே போக பாக்யா யாரையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகிறார் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

பாக்யா இப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்கும், கோபி ராதிகாவை தேடி போவாரா? அல்லது பாக்யா தனது பிஸினசில் முன்னுக்கு வந்து கோபிக்கு இணையாக தனது தொழிலை முன்னேற்றுவாரா என்ற எதிர்பார்பப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi today episode update in tamil