Advertisment

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த ராதிகா... கோபி தாங்குவாரா? பரபரப்பாகும் பாக்கியலட்சுமி

உள்ளுக்குள் கஷ்டம் இருந்தாலும் அது தனது வீட்டு ஆட்களுக்கு தெரிய கூடாது என்பதில்உறுதியாக இருக்கும் கோபி தற்போது தனது வீட்டுக்கு எதிர் வீ்ட்டில் ராதிகாவுடன் குடியேறியுள்ளார்.

author-image
WebDesk
Oct 31, 2022 20:49 IST
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி கோபி

நல்ல பெயர் வாங்க தான் சொன்ன பொய் தனக்கே வினையாக முடிந்துவிட்டதே என்று கோபியை தனியாக புலம்ப வைத்துள்ளார் ராதிகா

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மனைவி குழந்தைகள் அம்மா அப்பா என அனைவரையும் விட்டு விட்டு ராதிகாதான் முக்கியம் என்று அவரை திருமணம் செய்துகொண்ட கோபி தற்போது ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். அதிலும் ஒரு காபிக்காக அல்லல்படும் கோபி அல்டிமேட்.

உள்ளுக்குள் கஷ்டம் இருந்தாலும் அது தனது வீட்டு ஆட்களுக்கு தெரிய கூடாது என்பதில்உறுதியாக இருக்கும் கோபி தற்போது தனது வீட்டுக்கு எதிர் வீ்ட்டில் ராதிகாவுடன் குடியேறியுள்ளார். இதனால் நாளுக்கு நாள் கோபிக்கு ராதிகா தரும் தொல்லை காமெடி கலாட்டாவாக சென்றுகொண்டிருக்கிறது.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில்,  இனியாவை ஸ்கூல் வேனில் ஏற்றிவிட பாக்யாவும் ஜெனியும் வீட்டுக்கு வெியில் வருகிறார்கள். அப்போது கோபி வீட்டில் மயூக்கு ராதிகா லஞ்ச் கொடுக்கிறார். இதை பார்த்த கோபி எனக்கு லஞ்ச் என்று கேட்க நீங்கதான் நான் மூனுவேளையும் வெளியில் தான் சாப்பிடுவேன்னு சொன்னீங்களே என்று சொல்கிறார் ராதிகா. மேலும் இப்போது உங்களுக்கு லஞ்ச் வேணுமா உப்புமா கொண்டு வரட்டுமா என்று கேட்கிறார்.

இதைகேட்டு அதிர்ச்சியாகும் கோபி உனக்கு எதுக்கு கஷ்டம். நீ மயூக்கு மட்டும் லஞ்ச் கொடுத்தால் போதும் நான் வெளியிலே சாப்பிட்டுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். அதன்பிறகு மயூவுடன் வெளியில் வரும் கோபியை பார்த்து பாக்யா இனியா அதிர்ச்சியாகின்றனர். அதன்பிறகு இனியா நடந்து செல்வதை பார்க்கும் கோபி,  செல்லம் ஸ்கூலுக்கு தானே போற நான் ட்ராப் பண்றேன்டா வா என்று சொல்கிறார்.

ஆனால் காருக்குள் மயூ இருப்பதை பார்க்கும் இனியா கோபியை மதிக்காமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார். அதன்பிறகு வெளியில் வரும் கோபி தனது நண்பனை ரெஸ்டாரண்டில் சந்திக்கிறார். அவரிடம் தான் இப்போது சந்தோஷமாக இருப்பதாக சொல்லி கோபி பேசிக்கொண்டிருக்கும்போது அவரது அக்கவுண்டில் 40 ஆயிரம் பணம் வருகிறது. யார் போட்டது என்று யோசித்துக்கொண்டிருக்க, அப்போது பாக்யா போன் செய்து வீட்டுக்கு 40 லட்சம் பணத்தில் முதல் வனை 40 ஆயிரம் போட்டுருக்கேன் செக் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிடுகிறார்.

இதனால் கடுப்பாகும் கோபி, இடியட் என்று திட்டிக்கொண்டிருக்க அவரது நண்பர் யார திட்ற என்று கேட்கிறார். அதற்கு கோபி என் பழைய க்ளைண்ட் என்று சொல்லி சமாளித்துவிட்டு கிளம்புகிறார். அதனைத் தொடர்ந்து மயூவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும் கோபி தலை வலிக்குது ஒரு காபி கிடைக்குமா என்று கேட்க, அந்த நேரத்தில் மயூ ராதிகாவை கூப்பிட உடனே ராதிகா சென்றுவிடுகிறார்.  

இதை பார்த்து கடுப்பாகும் கோபி, கடைச வரைக்கும் இந்த வீட்ல காபி கிடைக்காது ஒருத்தன் இங்க கத்திக்கிட்டு இருக்னே் நம்மள கொஞ்சமாவது கண்டுக்கிறாளா மயூவைத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் கோபி. அதன்பிறகு வரும் ராதிகாவிடம் பாஸ்போர்ட் ஆபீஸ்ல இருந்து அப்பாயின்மென்ட் லெட்டர் வரும் அந்து அந்த வீட்டுக்குதான் போகும். அதை போஸ்ட்மேனிடம் சொல்லி வாங்க காத்துக்குக்கிட்டு இருக்கேன் என்று சொல்கிறார்.

ஆனால் அந்த லெட்டர் பாக்யா வீட்டுக்கு சென்றுவிட போஸ்ட்மேன் கோபி பெயரை சொல்லி லெட்டர் வந்திருக்கு என்று சொல்கிறார். ஆனால் கோபியின் அப்பா அப்படி யாரும் இங்க இல்ல. இந்த பெயரில் எதாவது லெட்டர்வந்தால் இங்க கொண்டு வராதீங்க என்று சொல்லிவிட போஸ்ட்மேன் உடனடியாக கிளம்பிவிடுகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijaytv Serial #Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment