பாக்யா வேண்டாம்… கோபியுடன் சென்ற இனியா… அதிர்ச்சியில் குடும்பம்

நான் என் டாடியதானே கூப்பிட்டேன். இதுக்காக ஏன் என்னை திட்டிறீங்க என்று கேட்டு தான் வீட்டை விட்டு கிளம்புவதாக சொல்கிறார்.

பாக்யா வேண்டாம்… கோபியுடன் சென்ற இனியா… அதிர்ச்சியில் குடும்பம்

தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில இனியா பாக்யாவை விட்டுவிட்டு கோபியுடன் ராதிகா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.

தற்போது கோபி தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா தனி ஆளாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிவிட்டார். இதனால் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது குடும்பத்தின் மத்தியில் சந்தோஷமான வாழ வேண்டும் என்று ராதிகாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்த கோபி, தற்போது சந்திக்கும் சிக்கல்கள் பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.

இந்நிலையில், பள்ளியில் செல்போன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட இனியா, பாக்யாவை அழைப்பதற்கு பதிலாக கோபியை அழைத்து பள்ளியில் பேச சொல்லிவிடுகிறார். அதன்பிறகு ஸ்கூலில் பிரின்பால் வர சொன்னது குறித்து கேள்விப்பட்டு ஸ்கூலுக்கு வரும் பாக்யாவுக்கு கோபி வந்துவிட்டு போனது குறித்து பிரின்ஸ்பால் சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் பாக்யா இனியாவை வீட்டுக்கு அழைத்துச்செல்கிறார்.

வீட்டுக்கு வந்ததும், இனியா ஸ்கூலுக்கு கோபி வந்தது குறித்து அனைவரும் கேட்க, நான் என் டாடியதானே கூப்பிட்டேன். இதுக்காக ஏன் என்னை திட்டிறீங்க என்று கேட்டு தான் வீட்டை விட்டு கிளம்புவதாக சொல்கிறார். அதற்கு ஏற்றால்போல் பாட்டியும் உனக்கு கோபிதான் வேணும்னா அப்படியே வெளியில போய்டு என்று சொல்கிறார். இதனால் வீட்டை விட்டு வெளியே வரும் இனியாவை கோபி பார்த்தவிட்டு, வீட்டுக்கு உள்ளே அழைத்து செல்கிறார்.

தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், இங்க எல்லாரும் என்ன திட்றாங்க டாடி என்று சொல்கிறாள். அதற்கு கோபி அவ செஞ்ச சின்ன தப்புக்காக இப்படியா டார்ச்சர் செய்வது என்று கேட்க, நீ எல்லோரையும் விட்டுட்டு தனியா போனவன் தானடா என்று ராமமூர்த்தி கேட்க, நான் இவ வேண்டானுதான் போனேன் என் குழந்தைங்க வேண்டாம்னு போகல என்று சொல்கிறான் கோபி. மேலும் இனியா இப்போ என் கூட வரனு சொன்ன அவள கூட்டிக்கிட்டு போகவும் நான் ரெடி என்று சொல்கிறான்.

இதனால் அதிர்ச்சியாகும் குடும்பத்தினர் குழந்தைக்க தப்பு பண்ணா கண்டிக்கனும் அதுக்கு சப்போர்ட் பண்ணக்கூடாது என்று பாக்யா சொல்ல அவ அந்த அளவுக்கு எந்த தப்பும் பண்ணல என்று சொல்கிறான் கோபி. வாக்குவாதம் முற்றவே உங்க இனியா நீயே சொல்லு என்று கேட்கிறாள் பாக்யா. அப்போது பாக்யா மற்றும் பாட்டி அடிக்க வந்ததை மனதில் வைத்து அப்பாவுடன் சொல்ல முடிவு செய்து கோபியின் கையை பிடித்துவிடுகிறாள்.

என்னமா இனியா... இப்படி பண்ணிட்ட... 😳| Baakiyalakshmi

இதைபார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைய செழியனும் எழிலும், இனியாவை அழைக்கின்றனர். ஆனால் அவர் அப்பாவுடன் செல்வதில் உறுதியாக இருக்கிறாள். அதன்பிறகு அவளை அழைத்துக்கொண்டு ராதிகா வீட்டுக்கு செல்கிறான் கோபி. அதை பார்த்த ராதிகா அதிர்ச்சியடைய, அங்கே நடந்த குறித்து கோபி ராதிகாவிடம் சொல்கிறான். இதை கேட்டு ராதிகா சம்மதம் சொல்கிறாள்.

அதன்பிறகு இனியாவுக்கு ஸ்னாக்ஸ் கொடு ராதிகா என்று கோபி சொல்ல ராதிகா ஸ்னாக்ஸ் எடுக்க செல்கிறாள். கோபி இனியா மயூ ஆகியோருடன் அமர்திருக்க அத்துடன் முடிகிறது எபிசோடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi today episode update in tamil

Exit mobile version