ராதிகாவை ஏமாற்றிய கோபி… எழிலுக்கு செக் வைத்த ஈஸ்வரி… பரபரப்பான பாக்கியலட்சுமி

கோபி வீட்டில் ராதிகா யூடியூப்பை பார்த்து சமையல் செய்து அசத்தி விடுகிறார். அதை சாப்பிட்ட எல்லோரும் தன்னை பாராட்டுவார்கள் என்று மனதிற்கு நினைத்துக்கொண்டு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுகிறாள்.

ராதிகாவை ஏமாற்றிய கோபி… எழிலுக்கு செக் வைத்த ஈஸ்வரி… பரபரப்பான பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் பல அதிரடியாக திருப்பங்கள் அரங்கேறியுள்ளது.

பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி தனது வீட்டுக்கு எதிர் வீட்டிலேயே குடி வந்து தனது மகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது பேத்தியுடன் தான் இருப்பேன் என்று கூறி கோபியின் அப்பாவும் கோபி வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு நடக்கும் ரகளைகள் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஜெனி எழில் பாக்யா மூவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது எழிலிடம் அமிர்தா பற்றி கேட்கிறார் ஜெனி. அப்போது பாக்யா உனக்கு தெரியுமா என்று கேட்க, ஜெனி அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியும் என்று சொல்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் பாட்டி, எழில் மீது சந்தேகப்படுகிறார்.

அப்போது பாக்யாவிடம் அமிர்தா குறித்து சொல்லிவிடலாம் என்று எழில் சொல்ல இப்போது வேண்டாம் என்று பாக்யா சொல்லி விடுகிறார். இதனிடையே கோபி வீட்டில் ராதிகா யூடியூப்பை பார்த்து சமையல் செய்து அசத்தி விடுகிறார். அதை சாப்பிட்ட எல்லோரும் தன்னை பாராட்டுவார்கள் என்று மனதிற்கு நினைத்துக்கொண்டு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுகிறாள்.

சாப்பாட்டை சாப்பிடும் கோபி ரொம்ப நல்லாருக்கு ராதிகா எந்த ஹோட்டல்ல ஆர்டர் பண்ண என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார். மேலும் இதற்கு முன் இந்த ஹோட்டலில் நாம் ஆர்டர் செய்ததே இல்லை. இனிமேல் அங்கேயே ஆர்டர் செய்துவிடு என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியில் இருக்கும் ராதிகாவிடம், 25 வருஷமா பாக்யா வித விதமா சமைத்து கொடுத்திருக்கிறாள். ஆனால் இவன் ஒருநாள் கூட நல்லா இருக்கு என்று சொன்னதே இல்லை. உனக்கு மட்டும் சொல்லுவானு எப்படி எதிர்பாக்குறே தப்பு கணக்கு போட்டீயேமா என்று தாத்தா சொல்கிறார்.

இதனால் கடுப்பாகும் ராதிகா கோபி சொன்னதையே நினைத்துக்கொண்டிருக்கிறார் அப்போது அங்கு வரும் கோபி என்னாச்சி யார் மேல் கோபம் என்று கேட்க நான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்து ஆசை ஆசையா சமைச்சேன். நீங்க இப்படி சொல்லிட்டீங்க என்று சொல்ல கோபி உனக்கு இப்படி ஒரு திறமை இருக்கா சாரி நான்தான் தப்பு செய்துவிட்டேன் என்று சொல்லி கையில் முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார் கோபி. அந்த நேரம் பார்த்து இனியா அங்கு வந்துவிடுகிறார்.  

மறுபுறம் எழிலை கூப்பிட்டு விசாரிக்கும் பாட்டி ஈஸ்வரி உனக்கும் அமிர்தாவுக்கும் இருக்கும் நட்பு நட்போடு இருந்தால் சரி. அதை தாண்டி வேறு எதுவும் இருக்க கூடாது என்று சத்தியம் செய் என்று தனது தலையில் சத்தியம் வாங்கிக்கொள்கிறார். மேலும் உங்களுக்குள் வேறு எதேனும் இருந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்ல எழில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi today episode update in tamil

Exit mobile version