'ராதிகா... இனி என் அடி பயங்கரமா இருக்கும்': வேற லெவலில் இறங்கிய பாக்யா

சார் சொன்னத கேட்டீங்கள்ள இனிமேல் நீங்க எதாவது வம்பு பண்ணினா என்னோட அடி பயங்கரமா இருக்கும்

சார் சொன்னத கேட்டீங்கள்ள இனிமேல் நீங்க எதாவது வம்பு பண்ணினா என்னோட அடி பயங்கரமா இருக்கும்

author-image
WebDesk
New Update
Baakiyalshmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆபீஸில் தன்னை அவமானப்படுத்திய ராதிகாவுக்கு பாக்யா தக்க பாடம் புகட்டியுள்ளார்.

Advertisment

பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட்டில், ஆபீஸில் தனது ரூமுக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் பாக்யாவை ராதிக வேண்டுமென்றே அலச்சியப்படுத்துகிறார். இதனால் பொறுமை இழக்கும் பாக்யா என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்க, சும்மாதான் உங்களை குப்பிட்டேன். சாப்டீங்களா என்று நலம் விசாரிக்கிறார்.

இதனால் கடுப்பாகும் பாக்யா எதற்காக இப்படி செய்றீங்க என்று கேட்க, நம்ம ரெண்டுபேருக்கும் நல்ல பாண்டிங் இருக்க வேண்டும் என்றுதான் என ராதிகா சொல்ல, பாக்யா கடுப்பாகி வெளியே வருகிறார். அப்போது செல்வி போன் செய்ததால் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் பாக்யா எம்.டி கோடீஸ்வரன் வருவதை பார்க்கிறார்.

அப்போது அவரிடம் பாக்யா கொஞ்சம் உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். அப்போது ராதிகா செய்யும் அத்தனை விஷயங்களையும் பாக்யா சொல்கிறார். இதை கேட்ட கோடீஸ்வரன், ராதிகாவை அழைத்து விசாரிக்கிறார். அப்போது ராதிகா இல்லை சார் நான் எதுவும் தப்பாக பேசவில்லை என்று சொல்கிறார். உங்களுக்கு இருக்கும் பர்சனல் கோபங்களை இங்கே காட்ட கூடாது.

Advertisment
Advertisements

உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது அதை தெரிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை என்று கோடீஸ்வரன் சொல்ல, ராதிக மன்னிப்பு கேட்டுவிட்டு இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். அப்போது பாக்யாவிடம் என்ன போட்டு கொடுக்கிறீங்களா என்று கேட்க, நீங்க பண்ற டார்சல் எல்லாம் பொறுத்துகிட்டு இருக்கனும்னு எனக்கு அவசியம் இல்லை.

சார் சொன்னத கேட்டீங்கள்ள இனிமேல் நீங்க எதாவது வம்பு பண்ணினா என்னோட அடி பயங்கரமா இருக்கும் என்று கோபப்பட்டு பேசிவிட்டு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக் ஸ்போக்கன் இங்கிலீஸ் க்ளாஸ் போகும் பாக்யாவிடம் எல்லோரும் என்ன சந்தோஷமா இருக்கீங்க என்று கேட்க பல நாள் பிரச்னை இப்போது முடித்துவிட்டேன் என்று சொல்கிறார்.

அதன்பிறகு க்ளாசில் பழனிச்சாமியுடன் பாக்யா ஆங்கிலத்தில் உரையாடுகிறார். அடுத்ததாக வீட்டுக்கு வரும் பாக்யா, தனது மாமியார் ஈஸ்வரியிடம் ஆபீஸில் ராதிகா செய்ததை பற்றி சொல்கிறார். இதை கேட்டு கோப்பபடும் ஈஸ்வரி, இன்னைக்கு ராதிகா வரட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: