Advertisment

சிங்கமாய் சீறிய கோபி... வீட்டை விட்டு வெளியேறிய ராதிகா : அடுத்து என்ன நடக்க போகுதோ!

இதுக்கப்புறம் பாக்யாக்கிட்ட ஏதாவது சண்டை இழுத்துட்டு இருந்த நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறாள்.

author-image
WebDesk
New Update
GOpi Radhika

கோபி - ராதிகா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோபி தனது குடும்பத்துடன் சேர்ந்துகொண்டு ராதிகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார்.

Advertisment

சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில், குடும்பத்தில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா அங்கு வருகிறார். அவரிடம் ஆபீஸில் நடந்தது குறித்து விசாரிக்க ஈஸ்வரி முயற்சிக்கிறார். ஆனால் வேண்டாம் என்று பாக்யாவும் தாத்தாவும் சொன்னதால் அமைதியாகிறார்.

அதன்பிறகு உள்ளே செல்லும் ராதிகா பத்திரத்தை எடுக்கும்போது தவறி கிழே விழுந்து விடுகிறது. இந்த சத்தத்தை கேட்டு டென்சன் ஆகும் ஈஸ்வரி ராதிகாவிடம் சென்று, கேட்க, நான் வேணுனே போடல தவறி விழுந்துவிட்டது என்று ராதிகா சொல்கிறார். ஆனாலும் விடாத ஈஸ்வரி சத்தம்போட ராதிகா கிச்சனில் இருந்து வெளியே வந்துவிடுகிறார். அப்போதும் விடாத ஈஸ்வரி பினனாடியே வந்து ராதிகாவிடம் ஆபீஸில் நடந்து குறித்த கேட்கிறார்.

உன்னால சும்மாவே இருக்க முடியாதா? எப்ப பார்த்தாலும் பாக்யா கிட்ட சும்மா வம்பிழுத்துட்டே இருக்க. பாக்யாவை அந்த கேண்டீன் ஆர்டர் எடுக்க விடாம சதி பண்ண. அவ முட்டி மோதி ஆர்டரை பிடிச்சா, இப்போ தினம் அவக்கிட்ட கேண்டீன்ல வைச்சு சண்டை போட்டுட்டு இருக்க என்று ஈஸ்வரி கேட்க, உடனே ராதிகா சின்ன குழந்தை மாதிரி அங்கதான் கம்லைண்ட் பண்ணீங்கனா இங்கேயும் வந்து கம்லைண்ட் பண்ணிட்டு  இருக்கீங்களா சொல்லுங்க குழந்தை என பாக்யாவை மீண்டும் வம்பிழுக்கிறாள்.

உடனே ஈஸ்வரி, நீதான் குழந்தை மாதிரி அவக்கிட்ட வம்பிழுத்துட்டு இருக்க இதுக்கப்புறம் பாக்யாக்கிட்ட ஏதாவது சண்டை இழுத்துட்டு இருந்த நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறாள். அதற்கு ராதிகா உங்களுக்கு பாக்யா தான பெஸ்ட் என கேட்க, ஆமா அவதான் பெஸ்ட். நீயெல்லாம் அவ கால் தூசிக்கு கூட வர மாட்ட என்று ஈஸ்வரி சொல்ல அந்த நேரத்தில் கோபி என்ட்ரி ஆகிறார். கோபியை பார்த்த ராதிகா சரியான நேரத்துல வந்தீங்க கோபி வாங்க என்னை என்னலாம் பேசுறாங்க பாருங்க என சொல்கிறார்.

அம்மா சொல்றதுல என்ன தப்பு இருக்கு ராதிகா என்று கேட்கும் கோபி என்ன நடந்தது என கேட்க ஆபீஸில் நடந்ததை சொல்லும் ஈஸ்வரி, பாக்யா அவ வாழ்க்கையை விட்டு கொடுத்தாள். இப்போ கேண்டீன் ஆர்டரையும் விட்டு கொடுக்கனுமா? அங்கு வைச்சு இவளை வம்பிழுத்துட்டு இருக்க என சொல்ல, உடனே கோபி இது எல்லாத்துக்கும் காரணம் நீதான் நீ வர வரைக்கும் இந்த வீடு அமைதியா, நிம்மதியாய் இருந்தது.நீ வந்ததுக்கு அப்பறம் என் நிம்மதி என் குடும்பத்தின் நிம்மதி எல்லமே போச்சு என சொல்கிறார்.

இதை கேட்டு ஷாக் ஆகும் ராதிகா கோபத்தில் மாடிக்கு செல்ல, மாடிக்கு வரும் கோபியிடம் மீண்டும் சண்டையை தொடர்கிறார் ராதிகா. நீ வாயை மூடிக்கிட்டு இருக்குற வரை இங்க எதுவும் மாற போறது இல்லை. அப்படி இருக்க முடியலன்னா கிளம்பி போயிட்டே இரு என கோபி சொல்கிறார். இதனால் ராதிகா அதிர்ச்சியாக தெரியாம சொல்லிட்டேன் ராதிகா என கோபி சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அதை கண்டுகொள்ளாத ராதிகா அழுது கொண்டு நீங்க எல்லாம் ஒரு மனுஷனே இல்லை என கோபியை கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு போகிறாள்.

ராதிகா போவதை பார்த்து ஈஸ்வரி செல்வியை விட்டு பார்க்க சொல்கிறார். இவ போயிட்டா நிம்மதி தான் என ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். ராதிகா தனது அம்மாவிடம் நடந்ததை சொல்லி கதறி அழுகிறாள். அதற்கு ராதிகாவின் அம்மா நீ அந்த பாக்யா மாதிரி நடிக்க கத்துக்கணும் என சொல்ல அதெல்லாம் என்னால முடியாது என ராதிகா சொல்ல நீ அந்த வீட்ல இடம் பிடிக்க நடிச்சு தான் ஆகணும் என சொல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment