ராதிகா பாக்யாவுக்கு வில்லியாக மாறிவிட்ட நிலையில், தற்போது பாக்யாவின் மகள் இனியா ராதிகாவுக்கு வில்லியாக மாறிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
Advertisment
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. தற்போது கோபி தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.
பாக்யா தனி ஆளாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிவிட்டார். இதனால் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இனியா ஸ்கூலில் செய்த தவறுக்காக அவளுக்கு சப்போர்ட் செய்து பாக்யாவிடம் இருந்து இனியாவை அழைத்து சென்றுவிட்டார். இதனிடையே இனியா பிக்னிக் சென்ற பள்ளி வேன் ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டடதாக கோபிக்கு போன் வருகிறது.
அதேபோல் இனியாவின் தோழியின் அம்மா பாக்யாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். இதனால் கோபி பாக்யா இருவரும் பள்ளிக்கு செல்கின்றனர். இதில் முன்னாடியே சென்றுவிடும் கோபி, இனியாவை பார்த்து நலம் விசாரித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது இனியாவை பார்க்க வீட்டுக்கு வரும் பாக்யாவை கோபி உதாசினப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.
அதன்பிறகு பாக்யாவை பார்த்துவிட்டு கோபி வீட்டுக்கு வரும் தாத்தாவிடம் அம்மா கூப்பிட்டப்போ நான் வந்திருந்தா டாடி என்மேல் கோபப்பட்டிருப்பார். அப்புறம் எப்படி அவரை நான் வீட்டுக்கு கூட்டி வர முடியும் என்று சொல்கிறாள். இதை கேட்டு ராதிகா உங்க அப்பாக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு அப்புறம் எப்படி அவர் உன்கூட வருவார் என்று கேட்க கண்டிப்பா உங்களிடம் இருந்து பிரிந்து என் டாடியை கூட்டி போவேன் என இனியா சவால் விடுகிறாள்.
அதன்பிறகு பாக்யாக வீட்டக்கு செல்லும் இனியா அங்கிருந்து ட்ரெஸ் எடுத்தக்கொண்டு கோபி வீட்டுக்கு வருகிறாள். என்னிடம் சொல்லாமல் ஏன் அங்கே போன இனியா என்று கேட்க ட்ரெஸ எடுக்கதான் போனேன் என்று இனியா சொல்கிறாள். அதன்பிறகு உள்ளே போ என்று கோபி சொல்ல ராதிகாவை முறைத்துக்கொண்டே இனியா உள்ளே போகிறாள்.
இதை பார்த்த கோபி அப்படியே ராதிகாவை பார்க்க ராதிகா கோபியை முறைத்துவிட்டு உள்ளே போகிறார். இதையெல்லாம் பார்த்த கோபி என்னடா இப்படி ஆகிடுச்சே என்று சொல்ல அருகில் தாத்தா கோபியை ஒரு மாதிரி பார்க்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இனியா ராதிகாவின் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுவாள் என்று பார்த்தால் இப்படி வில்லியாக மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil