மாமியாருக்கு செக் வைத்த கோபி : பாக்யாவுக்கு ஈஸ்வரி கொடுத்த ஷாக் ; பிரச்னை தீருமா?

பாக்கியலட்சுமி சீரியலின் சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு ஈஸ்வரி ஷாக் கொடுக்க, கமலாவுக்கு கோபி செக் வைத்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலின் சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு ஈஸ்வரி ஷாக் கொடுக்க, கமலாவுக்கு கோபி செக் வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
baakiya11

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரிக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இன்று ஒருநாள் இங்கு இருந்துவிட்டு நாளை வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று சொல்ல, பாக்யா, ராமமூர்த்தி எழில் இருவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு செழியனுடன் ஹாஸ்பிடலில் தங்க, கோபியும் ராதிகாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஹாஸ்பிடலில் தங்குகிறான். இரவு முழுவதும் கண்விழித்து பாக்யா ஈஸ்வரியை பார்த்துக்கொள்கிறாள்.

கோபி, காலையில் காபி வாங்கி வந்து ஈஸ்வரிக்கு கொடுக்க, ராமமூர்த்தி ஈஸ்வரியை வந்து பார்த்துவிட்டு, நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம் என்று சொல்ல, அதெல்லாம் முடியாது நான் தான் அம்மாவை கூட்டிகிட்டு போவேன். இனி நான் அவரை நன்றாக பார்த்துக்கொள்வேன் என கோபி சொல்ல, கிழிச்ச, உன்னாலதான் எனக்கு ஸ்டோக் வந்துச்சு, இப்போ ஈஸ்வரி ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்று ராமமூர்தர்தி சத்தம் போடுகிறார்.

அடுத்து கோபி உள்ளே வந்து நீங்கள் என் கூடத்தான் வர வேண்டும். நான் உங்களை நல்லா பார்த்துக்கொள்வேன் என்று வழக்கம்போல் போகி உருகி உருகி பேச, ஈஸ்வரி மீண்டும் கோபியுடன் செல்ல முடிவு செய்கிறாள். அதன்பிறகு பாக்யா, ராமமூர்த்தி செழியன் ஆகியோரும், ஈஸ்வரியை கூப்பிட, நான் கோபி கூட போகிறேன். நான் இல்லனா அவன் ரொம்ப கஷ்டப்படுவான். இனி என்னை நல்லபடியா பார்த்துக்கொள்வான். இனிமேல் நானும் ஒழுங்க சாப்பிடுவேன் என்று சொல்கிறாள்.

Advertisment
Advertisements

மறுபக்கம் கோபி திட்டியதை நினைத்து ராதிகா ஃபீல் பண்ண, இதை பார்த்த கமலா, அந்த அம்மா ஹாஸ்பில் போனதும் நல்லது தான். இனிமே பாக்யா வீட்டில் இருந்து அந்த அம்மாவை இங்கு அனுப்ப மாட்டார்கள். இனிமே நீயும் மாப்பிளையும் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்ல காலிங் பெல் அடிக்கிறது. பார்த்தியா நான் சொன்ன உடனே காலிங் பெல் அடிக்குது சகுனம் நல்லாருக்கு என்று சொல்லிவிட்டு கமலா கதவை திறக்க, ஈஸ்வரியுடன் கோபி நிற்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: