கமலாவை கண்டபடி பேசிய கோபி: கடுப்பான ராதிகா; ஈஸ்வரிக்கு பாக்யா கொடுத்த ஷாக்!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
https://youtu.be/paN9Quf6iiA
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 2 கல்யாணம் பண்ணியும் நிம்மதி இல்லாமல் இருக்கும் கோபி, ராதிகா வீட்டை விட்டு வெளியே போக சொன்ன விரக்தியில் பழையபடி குடிக்க தொடங்கிய நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கதது என்பதை பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் இருக்கும் கோபியை செழியன் காரில் கூட்டிச்செல்ல முடிவு எடுக்கிறான். ஆனால் இதற்கு முதலில் ஒப்புக்கொள்ளாத எழில், பிறகு நான் காரை ஓட்டுகிறேன் என்ற சொன்னதும்,செழியன் கோபியுடன் பின்னால் அமர்ந்துகொள்கிறான். வரும் வழியில் கோபி நீங்கல்லாம் யாரு என்று புலம்பிக்கொண்டே வருகிறான்.

இடையில் பாக்யா போன் செய்ய, முதலில் சமாளிக்கும் செழியன், அதன்பிறகு நடந்ததை சொல்ல, நீங்கள் எதிலும் தலையிட வேண்டாம் என்று சொல்கிறாள். அப்போது கோபி, எழில் செழியன் என் பசங்க என்று புலம்பிக்கொண்டே வர, ராதிகா வீடு வந்துவிடுகிறது. செழியன், கதவை தட்ட, கதவை திறக்கும், கமலா கோபி குடித்திருப்பதை பார்த்து, நீதான் இவரை குடிக்க வச்சியா என்று கேட்க, எங்களை நிம்மதியாக இருக்க விடாட்டீங்களா என்று கேட்கிறாள்.

இதை கேட்ட செழியன் கோபமாக அங்கிருந்து கிளம்ப, இதை தெரிந்துகொண்ட எழில் செழியனை சமாதானம் செய்து அழைத்து செல்கிறான். அதன்பிறக உள்ளே வரும் கோபி, நிதானம் இல்லாமல், நீ யார் என்று கேட்க, நான் தான் கமலா என்று சொல்கிறாள். அடுத்து நானும் ராதிகா பேபியும் தனியா இருந்த வரைக்கு சந்தோஷமா இருந்தோம். எப்போ எங்க அம்மாவும் அவங்க அம்மாவும் வந்தாங்களே அப்போ இருந்தே பிரச்சனை தான் என்று சொல்கிறான்.

Advertisment
Advertisements

மேலும் கமலா சரியான பிசாசு, பிசாசு என்று சொல்ல, ராதிகா கோபப்படுகிறாள். ஆனாலும் கோபி, அவளால தான் எனக்கு பிரச்சனை இனிமேல் அவளுக்கு மரியாதை தரப்போறதே இல்லை. இதை கேட்ட கமலா பாத்தியா ராதிகா இதெல்லாம் எனக்கு தேவையா என்று கேட்கிறாள். அடுத்து நாள் காலையில், பாக்யா ராமமூர்த்தி, ஈஸ்வரி இனியா எல்லோரும் கோவிலில் இருக்க, பாக்யா சர்ப்ரைசாக ஈஸ்வரியின் தோழி சாவித்ரியை அழைத்து வருகிறாள். முதலில் யார் என்று தெரியாத ஈஸ்வரி சாவித்ரி என்ற தெரிந்தவுடன் மகிழ்ச்சியடைகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: