Advertisment
Presenting Partner
Desktop GIF

ராதிகாவுக்கு பதிலடி கொடுத்த பாக்யா... கோபிக்கு வந்த அடுத்த சிக்கல்

அந்த வீட்ல ஒருத்தர் கூட உங்களை மதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது உங்கள பிடிக்காத ஒரு வீட்ல நீங்க எப்படி இருக்கீங்க.

author-image
WebDesk
New Update
Gopi

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்யா கொடுத்த நெருக்கடியின் காரணமாக ராதிகா வீட்டை விட்டு வெளியேற ரெடியாகிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபிக்கு இது சோதனைக்காலம். ஆனாலும் பாக்யாவை எப்படியெல்லம் அதிகாரம் பண்ணினாரோ அதைவிட அதிகமாக ராதிகாவிடம் பணிந்து செல்கிறார்.

இந்நிலையில், கோபி குடித்துவிட்டு இருக்கும்போது அவரது மகன் செழியன் கோபியை தன் வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டதால் இனிமேல் நானும் இங்குதான் இருப்பேன் என்று ராதிகாவும் பெட்டி படுக்கையுடன் வந்துவிட்டார். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ள பாக்யா அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனிடையே இன்றைய எபிசோட்டில், மயூவை பார்க்க தன் வீட்டுக்கு வரும் ராதிகா தனது அம்மாவிடம் என்னை அங்கு யாருமே மதிக்க மாட்டேன்கிறாங்க. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை என்று சொல்கிறார். இதற்கு ராதிகாவின் அம்மா நீ போனவுடன் உன்னை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் என்று நினைச்சியா? உன் வாழக்கையை நீதான் காப்பாத்திக்கனும்.

கொஞ்சநாள் பொறுமையா இரு இன்னும் இரண்டு மாதங்களில் அந்த வீடே என் கண்ட்ரோலுக்கு வரும் என்று சொல்ல ராதிகா சரி என்று சொல்லிவிட்டு மயூவை பார்த்துவிட்டு ஆபீஸ்க்கு கிளம்புகிறார். ஆபீஸில் பாக்யாவும் செல்வியும் பிஸியாக இருக்கும்போது அங்கு வரும் ராதிகா சுயமரியாதை என்று பேசுனீங்களே இப்போ இன்னும் எப்படி அந்த வீட்டில் இருக்கீங்க என்று கேட்கிறார்.

சுயமரியாதை எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் இருக்கனும். அந்த வீட்ல ஒருத்தர் கூட உங்களை மதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது உங்கள பிடிக்காத ஒரு வீட்ல நீங்க எப்படி இருக்கீங்க. உங்களுக்கு சுயமரியாதை இல்லையா என்று கேட்டு பதிலடி கொடுக்கிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா காபி நல்லாவே இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார். அடுத்து வீட்டில் பாக்யா எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்க அனைவரும் சாப்பாடு சூப்பர் என்று பாராட்டுகின்றனர். அப்போது அங்கு வரும் கோபி இந்த குடும்பத்தையா விட்டுட்டு போனோம் என்று யோசிக்கிறார்.

அதன்பிறகு ரூமிற்கு வரும் கோபிக்கு ராதிகா டம்ளரில் தண்ணீர் கொடுக்கிறார். அதை பார்த்து கோபி என்ன தண்ணீ கொடுக்கற டின்னர் இல்லையா என்று கேட்க, இன்னைக்கு சாப்பாடு இந்த தண்ணீதான் குடிச்சிட்டு படுத்து தூங்குங்க என்று சொல்கிறார். இந்த வீட்டில் யாரும் என்னை மதிக்க மாட்ராங்க கிக்கனுக்குள்ளேயும் விட மாட்ராங்க. எப்போவும் பாக்யா கிச்சனில் நின்னுட்டே இருக்காங்க. என்று சொல்ல அதுக்குதான் ஆன்லைனில் ஆர்டர் பண்ணலாம் என்று கோபி சொல்கிறார்.

அதை கேட்ட ராதிகா எனக்கு இந்த வீட்டில் ஒரு கிச்சன் ஏற்பாடு பண்ணி கொடுங்க. என்று கேட்கிறார். அப்படியெல்லம் பண்ண முடியாது பாக்யா என்று கோபி சொல்ல இன்னமும் உங்க மனசில் பாக்யாதான் இருக்காங்க என்று கேட்கிறார். இல்ல இல்லை நான் அதுக்காததான் சொல்ல வந்தேன். ஆனால் பசியில இருக்கேன். அதனாலதான் இப்படி ஏதோ பேசிட்டேன். இப்போ நான் ஆன்லைனில் ஆர்டர் பண்றேன் என்று சொல்லி நைசாக வெளியில் வரும் கோபி இவ கூட வாழவே முடியாது சொத்திடலாம் போல என்று சொல்லி புலம்புகிறார் அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment