விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ராதிகா இப்போது கோபியை விவாகரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகாவை தேடி கோபி அவர் வீட்டுக்கு வர, ராதிகாவின் அம்மா ராதிகா அங்கு இல்லை எங்கு சென்றாள் என்று தெரியவில்லை என்று சொல்ல,கோபி அதை நம்பாமல் வீட்டில் உள்ள ரூம்கள் அனைத்தையும் திறந்து பார்க்கிறான். ஆனால் அப்போது ராதிகா அங்கு இல்லை என்று தெரிந்துகொண்டு, அதிர்ச்சியில், இருக்க, ராதிகாவின் அம்மா என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகும் என்று நினைக்கல என்று சொல்கிறார்.
மேலும் ராதிகா என்னை விட்டுட்டு போய்ட்டா என் கதி என்ன ஆகிறது? என்று அழ கோபி, அங்கிருந்து கிளம்புகிறான். மறுபக்கம், மயூவை பீட்ச்சுக்கு அழைத்து சென்ற ராதிகா உன்னிட்டம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லி, கோபியை எனக்கு நல்ல ப்ரண்டா தெரியும். அப்போது எதார்த்தமாக அவருடைய ஃபேமிலி சரியில்லை என்று சொன்னார். நானும் உன் நல்லதுக்காக, யோசித்து அவரை திருமணம் செய்ய சம்மதித்தேன். இந்த முடிவு எடுத்தபிறகுதான் அவர் என் க்ளோஸ் ப்ரண்டு பாக்யாவின் கணவர் என்று தெரிந்துகொண்டேன்.
இனிமேல் உன் லைப்பில் அப்பா என்ற ஒருவர் இல்லை. அவரை உன் லைப்பில் கொடண்டுவந்தது எவ்வளவு தவறு என்று இப்போது தான் எனக்கு புரிந்தது. என்னை மன்னித்துவிடு என்று மயூவிடம் ராதிகா மன்னிப்பு கேடக், என்ட எதுக்கு மம்மி மன்னிப்பு கேட்குறீங்க என்று மயூ கேட்க, நீ மெச்சூடு ஆன பொண்ணு, இப்போ இருக்க பொண்ணுங்க எல்லாம் அம்மாகிட்ட சண்டை போடுறாங்க, ஆனால் நீ அந்த மாதிரி எதுவும் பண்ணவில்லை என்று சொல்லி பாராட்டுக்கிறாள்.
மேலும் இனி நீ வாழும் ஒவ்வொரு நொடியும் உனக்காக மட்டுமே நான் இருப்பேன் என்று சொல்கிறாள்.மறுபக்கம் செல்வியும் பாக்யாவும், கோபியும் ராதிகாவும் மீண்டும் சேர்வார்களா அல்லது பிரிவார்களா என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கோபிக்கு ஒரு லெட்டர் வர, அதை பாக்யா வாங்குகிறாள். சோபாவில் கோபி வருத்தமாக உட்கார்ந்திருக்க, ஈஸ்வரி நலம் விசாரிக்கிறாள். ராதிகாவும் மயூவுமு் இல்லாமல் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று கோபி சொல்ல, ஈஸ்வரி வழக்கம்போல் ராதிகாவை திட்டிக்கொண்டு இருக்கிறாள். அப்போது இனியா என்ன டாடி லெட்டர் என்று கேட்க, கோபி அதை பிரித்து பார்த்து அமைதியாக இருக்கிறான்.
வீட்டில் இருக்கும் எல்லோரும் என்ன என்று கேட்க, ராதிகா டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்கா என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். அதன்பிறகு ராதிகா என்னை விட்டு பிரிந்து போக, முடிவு எடுத்தவிட்டாளா என்று, தட்டு தடுமாறி சொல்ல, ராதிகாவின் முடிவு குறித்து ஜெனி மற்றும் செல்வியிடம் பாக்யா பேசிக்கொண்டிருக்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.