விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தனது மகனை விவாகரத்து செய்த ராதிகாவிடம் ஈஸ்வரி மன்னிப்பு கேட்டுள்ளார். இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விவாகரத்து பெற்ற ராதிகா, கடைசியாக உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று சொல்ல, கோபி அவளை கூட்டிக்கொண்டு காரில் வீட்டுக்கு வருகிறான். வரும் வழியில், கோபி எமோஷ்னலாக பேச, ராதிகா அதை கேட்டு சிரித்துக்கொண்டே வருகிறாள். அதன்பிறகு எனது பேவரேட் காபி ஷாப் போய்விட்டது என்று சொல்ல, கோபி காரை திருப்பி வந்து, ராதிகாவுக்கு காபி வாங்கி கொடுக்கிறான்.
அதன்பிறகு இருவரும் பேசிக்கொண்டே பாக்யா வீ்ட்டுக்கு வர, இனியாவும் ஈஸ்வரியும் கோபி போனை எடுக்கவில்லை. மனசு மாறிவிட்டானா என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது வெளியில் கோபி ராதிகா இருப்பதை பார்த்த செல்வி உள்ளே வந்து சொல்கிறாள். இதனால் அதிர்ச்சியாகும் ஈஸ்வரி, திரும்பவும், ராதிகாவுடன் வாழ முடிவு செய்துவிட்டானா? என்று யோசிக்க, கோபி ராதிகா இருவரும் வீட்டிற்குள் வருகின்றனர்.
உள்ளே வந்த ராதிகா, சமைச்சிட்டு இருக்கீங்களா, வாசனை தெரு முனை வரைக்கும் வீசுது என்ற பாக்யாவிடம் சொல்கிறாள். அதன்பிறகு ஈஸ்வரியின் அருகில் வந்து, உங்க பையனை நான் பிரிக்க மாட்டேன் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொல்கிறாள். அப்போது ஈஸ்வரியும் ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். இருவரும் பக்குவமாக பேசிக்கொண்டு இருக்க, இனி ராதிகா நம் வாழ்க்கையில் இல்லை என்று நினைத்து கோபி, தனியாக ரூமில் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறான்.
அப்போது இனியாவிடமும் இனி உன் டாடியை பிரிக்க மாட்டேன் என்று சொல்ல, இனியா கண் கலங்குகிறாள். அதன்பிறகு ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கும், இனியா, மயூவிற்கு ஒரு மேக்கப் கிட் எடுத்து வந்து கொடுக்கிறாள். கடைசியாக பாக்யா கையால் சாப்பிட வேண்டும் என்று ராதிகா சொல்ல, பாக்யா சாப்பாடு பரிமாறுகிறாள். அப்போது கோபியையும் அழைக்க அவன் விருப்பமே இல்லாமல் வந்து சாப்பிடுகிறான்.
சாப்பிடும்போது அமைதியாக இருக்க, ஏன் எப்போதும் சாப்பிடும்போது கலகலவென இருக்கும், ஆனா இப்போ ரொம்ப அமைதியாக இருக்கீங்க என்று கேட்க, பாக்யா, எழில், அமிர்தா, செழியன் ஜெனி என எல்லோரும் இருக்கும்போது பேசிக்கொண்டிருப்போம். இப்போது அவங்க இல்லாததால் அமைதியாக இருக்கிறது என்று சொல்கிறாள். அப்போது ராதிகா திடீர் என்று தான் நான் இங்கு வர முடிவு செய்தேன் என்று சொல்ல, கோபி சாப்பிடாமல் சாப்பாட்டை கிளறிக்கொண்டிருக்க அத்துடன் எபிசோடு முடிகிறது.