விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் மகள் இனியாவும், செல்வியின் மகன் ஆகாஷூம் காதலிக்கும் நிலையில், செல்வி வீட்டுக்கு சென்ற இனியாவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு தொடக்கத்தில், பாக்யா தனது ரெஸ்டாரண்டில், எழில் தனது படப்பிடிப்பு பற்றி பேசிய வீடியோவை திரும்ப திரும்ப ஓடவிட்டு பார்த்துக்கொண்டிருக்க, கடுப்பான செல்வி, ரிமோட்டை எடுத்து ஆப் செய்ய நினைக்க ஆனால் பாக்யா தடுத்மதுவிடுகிறாள். அதன்பிறகு தனது மகன் தான் தன் பெயரை தான் படத்திற்கு வைத்திருக்கிறான் என்று பாக்யா கஷ்டர்களிடம் சொல்கிறாள்.
அதை கேட்ட செல்வி, அக்கா கண்ணுபட்டுவிட போகிறது என்று சொல்ல, அதுவெல்லாம் ஒன்னும் இல்லை. என் மகள் பட்ட கஷ்டத்திற்கு இப்போது தான் பலன் கிடைத்திருக்கிறது. அதை நான் பார்த்து சந்தோஷப்படனும் என்று சொல்கிறாள். அதன்பிறகு கோபி பாக்யா இருவரிடமும் பேச வேண்டும் என்று சொல்ல, அப்போது ஜெனியின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி செழியன் அங்கு செல்கிறான். ஆம்பள இல்லாத வீடு, செழியனை அங்கேயே இருக்க வைக்கிறார்கள் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சியாகிறாள்.
இப்படி இருக்க வாய்ப்தே இல்லை. நீங்க தான் தேவையில்லாம கற்பனை செய்றீங்க, அவங்க அப்பா பண்ண மாட்டாங்க, செழியனுக்கு எங்கு இருக்க பிடிக்கிறதோ அங்கு இருக்கட்டும் என்று சொல்ல, என் பிள்ளைங்க மீது உனக்கு அக்கறை இல்லையா, அவனை உன் கட்டப்பாட்டுக்குள் வைக்க மாட்டீயா என்று கேட்டு ஈஸ்வரி திட்டுகிறார். இதை கேட்ட பாக்யா, எனக்கு பிரச்னை இல்லை. அவங்கவங்க வாழ்க்கையை வாழட்டும். என் பிள்ளை என்பதால் நான் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்கிறார்.
பாக்யா சொன்னதை ஏற்றுக்கொள்ளாத ஈஸ்வரி கோபியிடம் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பாக்யா சொல்வது சரிதான் என்று கோபியும் பேசுகிறார். மறுபக்கம் ஆகாஷ் வீ்ட்டுக்கு இனியா, வர, இனியாவை பார்த்து ஆகாஷ் பயப்படுகிறான். யாராவது பார்த்த தப்பா பேசுவாங்க என்று சொல்ல, உனக்காக ஒரு புத்தகம் வாங்கி வந்தேன். வேற ஒன்றும் இல்லை என்று சொல்கிறாள் இனியா. இந்த புத்தகத்தை வாங்க பணம் என்று கேட்க, அம்மா கொடுத்த பாக்கெட்மணி என்று சொல்கிறாள் இனியா. அந்த நேரத்தில் செல்வி வீட்டுக்கு வர இனியா ஒளிந்துகொள்கிறாள்.
செல்வியை கண்டதும் ஆகாஷ் பயத்தில் நடுங்க, செல்வி என்ன என்று விசாரிக்கிறாள். ஆகாஷ் உண்மையை மறைத்துவிடுகிறான். செல்வி போனை எடுக்க வந்ததாக சொல்லி விட்டு கிளம்பிவிடுகிறாள். செல்வி சென்றதும் ஆகஷிடம் நம் காதல் விஷயத்தை எப்போது வீட்டில் சொல்ல போகிறோம் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். அடுத்து எழில் எல்லோரையும் சர்ப்ரைஸ் என்று உட்கார வைக்கிறான். பாக்யாவும் கடைசியில் இருந்து சீக்கிரம் வருகிறாள்.
அப்போது ஈஸ்வரி எழில் நினைத்த மாதிரி படம் பண்ணியாச்சு, இனிமேல் அமிர்தாவும் எழிவுலும் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார்கள் என்று சொல்ல, அந்த நேரத்தில் எழில் செழியனும் கூடவே கூட்டி வருகிறான் அத்துடன் எபிசோடு முடிகிறது.