பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா ஆகாஷ் மீது செல்விக்கு சந்தேகம் வர, பாக்யாவுக்கு, கோபி ஒரு லெட்டர் கொடுக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில், இன்றைய எபிசோட்டில், பங்ஷனில் இருந்து ஈஸ்வரி கோபமாக சென்றுவிட, இனியா அவருக்கு போன் பண்ணி வீட்டுக்கு போய்ட்டீங்களா என்று கேட்க, உங்க அம்மா கேட்க சொன்னாளா என்று ஈஸ்வரி பதிலுக்கு கேட்கிறார். உடனே கோபி, போனை வாங்கி, நானும், பாட்டியும் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிட்டோம் என்று சொல்கிறார்.
அடுத்து கோபியிடம், ஈஸ்வரி பாக்யா முன்ன மாதிரி இல்லை ரொம்ப மாறிட்டா, ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணி, நாலு காசு பாத்துட்டா, அவளுக்க திமிரு வந்துடுச்சி, மதிக்க மாட்டேன்கிறா என்று சொல்கிறார். அதற்கு கோபி, பாக்யா நான் வேண்டாம் என்பதில் உறுதியா இருக்க, அவளிடம் இதை பற்றி பேச பர்மிஷன் வாங்குனீங்களா என்று கேட்க, எல்லோரும் கிட்ப் கொடுத்தாங்க நானும் கொடுத்தேன். அவ்வளவு தான். ஆனா அவ இப்படி பேசுவானு எதிர்பார்க்கல என்று ஈஸ்வரி சொல்கிறார்.
இதை கேட்ட கோபி, யாரையும் கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது மா இதை இப்படியே விட்டுடுங்கஎன்று சொல்கிறார். அதன்பிறகு கோபி கிச்சனுக்கு வர, அங்கு பாக்யாவிற்கு கொடுத்த லெட்டர் இருக்கிறது.இதை கோபி படித்து பார்க்கிறார். நான் உனக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இதுவரைக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது கிடையாது. எந்த கிப்டும் கொடுத்தது கிடையாது. ஆனா உன்ன விட்டு பிரிஞ்சு போகும்போது தான் உன்னுடைய அருமை என்னன்னு எனக்கு புரிஞ்சது.
இப்போ ராதிகா என்னை விட்டுட்டு போட்டதால் நான் இப்படி சொல்லல. கோபியின் ஃபீலிங் நான் இந்த வீட்டிலேயே இருக்கணும்ங்கறதுக்காகவும் நான் இதை உன்கிட்ட சொல்லல. நீ வேற ஒரு ஆளா மாறி நிக்குற. நீ சந்திச்ச கஷ்டங்கள் துரோகங்கள் எல்லாம் ரொம்ப அதிகம். நீ உனக்கும் உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு உண்மையா இருந்திருக்கிறாள். என்னுடைய அப்பா அம்மாவை நீ நல்லா பாத்துக்கிட்ட. இதுதான் நான் உனக்கு சொல்லும் முதல் பிறந்தநாள் வாழ்த்தாக கூட இருக்கலாம். ஹாப்பி பர்த்டே பாக்யா என்று எழுதி வைக்கப்பட்டிருப்பதை படித்து பார்த்துவிட்டு மீண்டும் அதே பைக்குள் வைத்து எடுத்து சென்று விடுகிறார்.
அதன்பிறகு, ரெஸ்டாரண்டில், ராதிகா எனக்காகத்தான் கோபியை வேண்டாம் என்று சொன்னீங்களா என்று கேட்க அப்படி இல்லை, நான் யாருக்காவும் இல்லை. அவருடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்ல, ராதிகா சரி என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். அதன்பிறகு அனைவரும் கிளம்பும்போது, செழியன் மட்டும் பாட்டி சொன்னதை கொஞ்சம் யோசித்து பாரும்மா என்று சொல்கிறான். இதை கேட்ட கோபி, இவ்வளவு நாள் கழித்து என் ஆசையை நிறைவேற்றி இருகிறேன். என் அன்பை என்னிடம் இருந்து பறிச்சிடாதீங்கடா என்று சொல்கிறார்.
அதன்பிறகு செல்வி ஆகாஷ் இருவரும் பேசிக்கொண்டிருக்க, செல்வி பாக்யா காபி கேட்கவும், அதை போடுவதற்காக போகிறார். அப்போது இனியாவும் ஆகாஷூம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் செல்வியை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைய, சும்மா தான் பேசிக்கொண்டு இருந்தாக கூறுகின்றனர். அதற்கு ஆகாஷிடம் இனியா சொல்லித்தான் என்னை வீடியோ எடுத்தியா என்று கேட்க, ஆமாம் என்று சொல்கிறான். பிறகு இனியா அங்கிருந்து கிளம்பி விடுகிறாள்.
அதன்பிறகு நீ அடிக்கடி இனியா கூட தானே பேசிட்டு இருக்க என்று செல்வி ஆகாஷிடம் கேட்க, அவன் அதிர்ச்சியாகி நிற்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.