விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வளவு நாள் வில்லனாக இருந்த கோபி தற்போது திருந்திவிட்ட நிலையில், பாக்யா கோபியிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டில், கோபி குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் போது, செல்வியுடன் அங்கு வரும் பாக்யா, ராஜசேகர் சார், 500 பேருக்கு கிராமத்து முறையில் சமையல் செய்து கொடுக்க ஒரு ஆர்டர் கொடுத்துள்ளார். அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை என சொல்ல, என்னிட்டம் பணமும் இல்லை, ஆள் யாரும் வேலைக்கும் இல்லை என்று சொல்கிறாள். இதை கேட்ட ஈஸ்வரி அப்படினா முடியாதுனு சொல்லிட்டு வர வேண்டிதானே என்று சொல்கிறாள்.
ராஜசேகர் சார், சமைத்து தர முடியுமா என்று கேட்கவில்லை சமைத்து கொடுங்கள் என்று சொன்னதாக சொல்ல, இதை கேட்ட ராதிகா, பணம் தான் உங்கள் பிரச்னையா, அப்படி என்றால் நான் தருகிறேன் என்று சொல்ல, பாக்யா வேண்டாம் என்று சொல்கிறாள். நீங்கள் எனக்கு எவ்வளவோ உதவி பண்ணிருக்கீங்க, இப்ப கூட உங்கள் வீட்டில் என்னை தங்கவைத்துள்ளீர்கள் கடனா வாங்கிக்கோங்க அப்புறம் திருப்பி கொடுங்க என்று சொல்கிறாள்.
பணம் இருந்தாலும் இப்போது என்னிடம் சமையலுக்கு ஆள் இல்லை என்று சொல்ல, நான் என் கிக்கசனில் இருந்து ஆட்களை அனுப்புகிறேன் என்று கோபி சொல்ல, இதை கேட்ட ஈஸ்வரி கோபி ஆட்களை வைத்து முடி அவனுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறாள். ஆனால் பாக்யா இருவரின் உதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சென்றுவிடுகிறாள். அதன்பிறகு எழிலிடம் போன் செய்து விஷயத்தை சொல்கிறாள்.
இதை கேட்ட எழில்,நீ அப்பாவிடம் உதவி கேட்பதில் தவறு இல்லை. என்னை கல்யாணம் செய்துகொண்டதில் இருந்து அவர் உனக்காக எதுவும் செய்யவில்லை. இப்போவாது உதவி செய்கிறாரே என்று சொல்ல, பாக்யாவும் அதை ஏற்றுக்கொள்கிறாள். அதன்பிறகு, கோபியிடம் சென்று பாக்யா உதவி கேட்க இதை பார்த்த ஈஸ்வரி உரிமையா கேளு அவன் பண்ணவான் என்று சொல்கிறாள். அப்போது ராதிகா மாடியில் இருந்து கீழே வர, பாக்யா கோபி பேசுவதை கேட்டுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“