/indian-express-tamil/media/media_files/2025/01/27/A0aDoKYV74esnBd5RxZv.jpg)
கார்த்தியின் திட்டத்தால் திக்குமுக்காடும் மாயா.. கையும் களவுமாக சிக்கப் போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் கார்த்தியிடம் மாயாவின் கருத்தடை மாத்திரை அட்டை சிக்கிய நிலையில் இன்று, கார்த்திக் மயில்வாகனத்திடம் மாயா தப்பானவளே தெரிந்து போச்சு ஆனால் மகேஷின் தப்பானவனா இருந்தா மட்டும் இந்த கல்யாணத்தை நிறுத்தலாம் இல்லனா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று சொல்கிறான்.
மறுபக்கம் ரேவதி ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தை தூங்கியதும் இன்னும் கொஞ்ச நாள் தான். தீபாவை நான் என்னுடனே வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறேன் அதுவரைக்கும் கொஞ்சம் நல்லபடியா பார்த்துக்கோங்க என்று சொல்லி விடை பெறுகிறாள். இங்கே கார்த்திக் மயில்வாகனத்தின் இன்னொரு ரகசிய நம்பரில் இருந்து மாயாவுக்கு போன் போட்டு உன்னை பற்றிய உண்மை தெரிந்து விட்டது என சொல்லி மிரட்டச் சொல்கிறான்.
மயில்வாகனம் மாயாவுக்கு போன் போட்டு நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும். கொழுந்தன் கூட ஜாலியா இருந்து கர்ப்பம் ஆகிட்டு இப்போ கர்ப்பத்தை கலைத்து விட்டாயா? டாக்டர் மல்லிகாவை தெரியுமா என்று கேட்க மாயா அதிர்ச்சி அடைந்து போனை கட் செய்து விடுகிறான். மீண்டும் போன் செய்யும் மயில்வாகனம் ஒரு லட்ச ரூபா பணத்தை கொடுத்தால் ஒரு விஷயத்தை யாரிடம் சொல்லாமல் இருப்பேன் என்று மிரட்ட மாயா ஃபோனை வைக்கிறான்.
பிறகு மகேஷிடம் சொல்லி பணத்தை கொடுத்து இந்த விஷயத்தை முடிக்க முடிவெடுக்கிறாள். மகேஷ் பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்க மாயா ரேவதியை சந்தித்து கல்யாண செலவுக்கு பணம் தேவைப்படுவதாக சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் கேட்க ரேவதி மாயாவை அழைத்துச் சென்று சாமுண்டீஸ்வரி முன்னாடி நிறுத்தி இவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணத்த குடுங்க என்று சொல்கிறாள்.
மயில்வாகனம் மற்றும் கார்த்திக் நம்ப பணத்தை வாங்கி நம்ம கிட்டயே கொடுக்கப் போறாங்க என நினைத்துக் கொள்கின்றனர். மயில்வாகனம் இவர் பெரிய கேடியா இருக்கா நாம ஒரு லட்சம் கேட்டா இவ இங்க இரண்டு லட்சம் கேட்டு வாங்கி ஆட்டைய போட பாக்குறா என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சண்முகத்தை மறித்து சவால் விடும் சௌந்தரபாண்டி.. வெல்ல போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் பேப்பரில் போட்டோவுடன் பேட்டி குறித்து செய்தி வர சௌந்தரபாண்டி சண்முகம் குடும்பத்தை அழிக்க சபதம் எடுத்த நிலையில் இன்று, சண்முகம் மற்றும் பரணி என இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்க எதிரே வந்து வழிமறிக்கும் சௌந்தரபாண்டி என்ன பணத்தை கொடுத்து பேப்பரில் செய்தி வர வைக்கிறியா என்று கேட்கிறார்.
மேலும் இந்த ஊர் வழக்கத்தை மாற்ற பாக்கறியா? ஆம்பளைங்க எல்லாம் பொண்ணுங்க வீட்டில் போய் இருக்கணுமா? உன் குடும்பத்தை கலைக்காமல் விட மாட்டேன் என்று சவால் விடுகிறார். சண்முகம் சௌந்தரபாண்டி விட்ட சவாலை எதிர்த்து உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சவால் விடுகிறான், அதே நேரத்தில் வெங்கடேஷ் சௌந்தரபாண்டி ஆளாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஆனால் பரணி அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறாள்.
மறுபக்கம் ரத்னா மதிய உணவு வேளையில் டீ குடித்து கொண்டிருக்க அறிவழகன் என்னங்க சாப்பிடலையா என்று கேட்க ரத்னா சாப்பாடு கொண்டு வரவில்லை என்று சொல்கிறாள். அறிவழகன் டீ-யை வாங்கி கீழே கொட்டி ஈ இருந்ததாக சொல்கிறான். பிறகு தன்னுடைய சாப்பாட்டை கொடுத்து ரத்னாவை சாப்பிட சொல்ல அவள் மறுக்கிறாள். அறிவழகன் பேச்சுலர் சாப்பாடு எவ்வளவு மோசம் தெரியுமா? சாப்பிட்டு பார்த்து இது என்ன குழம்புனு ஒரே வாயில் சொல்லணும் என்று சொல்கிறான்.
அடுத்து ரத்னாவும் சாப்பிட்டு என்னவென்று சொல்ல முடியாமல் குழம்புகிறாள். இவர்கள் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் வெங்கடேஷ் சாப்பாடு கொண்டு வர ரத்னா தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று திட்டுகிறாள். அறிவழகன் நாங்க ஷேர் பண்ணி சாப்பிட்டுகிறோம் என்று சொல்ல வெங்கடேஷ் நான் இந்த ஸ்கூல்ல இல்லாததால் தானே இப்படியெல்லாம் நடக்குது. எப்படி இந்த ஸ்கூலுக்குள் வரேன்னு மட்டும் பாரு என்று சவால் விட்டு செல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.