விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவும் ராதிகாவும் ஒரே வீட்டில் இருக்கும் நிலையில், ராதிகா – ஈஸ்வரி இடையே வரும் சண்டைக்கு யாருக்கு ஆதரவாக நிற்பது என்பது குறித்து கோபி குழப்பத்தில் இருக்கிறார், இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், கோபி வாக்கிங் போகிறேன் என்று கிளம்பி வர, அவனுடன் ஈஸ்வரியும் வாக்கிங் வருவதாக சொல்லி கிளம்புகிறார். அப்போது அங்கு வரும் ராதிகா, உங்களுக்கு வயசு ஆகிடுச்சி அத்தை. கோபி வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாது. நீங்க கார் பார்கிங்ல நடங்க, எதற்காக பார்க்கு வரீங்க என்று கேட்க, ஈஸ்வரி அப்சட் ஆகிறார். அதன்பிறகு ராதிகா கோபி இருவரும் வாக்கிங் செல்கின்றனர்.
வாக்கிங் செல்லும்போது, ராதிகாவின் வேகத்திற்கு, கோபி ஈடுகொடுக்க முடியதாததால், நான் இங்கே இருக்கிறேன் என்று நீ போய்ட்டு வா என்று ராதிகாவை அனுப்பி வைக்க, ராதிகா வாக்கிங் செல்லும்போது, பாக்யாவை பார்க்கிறாள். இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டே வாக்கிங் செல்கின்றனர். அப்போது போகியை தேடி வரும் ஈஸ்வரி ராதிகாவும் பாக்யாவும் ஒன்றாக நடப்பதை பார்த்தும், கோபி தனியாக இருப்பதை பார்த்தும் கடுப்பாகிறார்.
கோபியிடம் சென்று, பார்த்தியாடா, ஒன்னா வாக்கிங் வந்து உன்னை தனியா விட்டுட்டு போய்ட்டா, எப்போதும் அம்மாதான் நிரந்தரம் என்று சொல்கிறார். அதன்பிறகு வீட்டிற்கு செல்ல, பாக்யா கிச்சனில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ராதிகாவும் சமையல் வேலை செய்துகொண்டு இருக்க, மயூ படித்துக்கொண்டிருக்க, கோபி அங்கு வருகிறான். அப்போது மயூ டவுட் கேட்க, கோபி அதை சொல்லிக்கொடுக்கிறான்.
அப்போது அங்கு வரும், இனியா, கோபி மயூவிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, கடுப்பாகிறாள். இதனால் கோபியின் அருகில் அமர்ந்து தேவையில்லாததை பேசிக்கொண்டு, மயூவுக்கு சொல்லிக்கொடுப்பதை இனியா கெடுக்கிறாள். அதே சமயம் கோபி அதை கண்டுகொள்ளாமல், மயூவுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை குறியாக இருக்க, இதை பார்க்கும் ஈஸ்வரி, உனக்கு படிக்க வேண்டும் என்றால், உன் அம்மாகிட்ட கேளு, அப்பா பொண்ணை பிரிக்க நினைக்காதே என்று சொல்கிறாள். இதை கேட்ட ராதிகா மயூவை அழைத்துக்கொண்டு ரூமுக்கு செல்கிறாள்.
ரூமில், இனி எந்த டவுட்டாக இருந்தாலும், என்னிடம் கேளு என்று, ராதிகா சொல்ல, அங்கு வரும் கோபி, அம்மா பேசியதை நினைத்து வருத்தப்படாதே என்று மயூவிடம் சமாதானம் சொல்ல, ஈஸ்வரி பேசியதை வைத்து ராதிகா ஃபீல் பண்ண, கோபி அவளுக்கு ஆறுதல் சொல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.