விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், இந்த சீரியலில் அதிகமாக விமர்சனங்களையும் ட்ரோல்களையும் பெற்று வரும் கேரக்டர் ஈஸ்வரி. இந்த கேரக்டர் இன்றும் தனது மகனுக்கு சப்போர்ட் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டுள்ளது. கூடவே இனியா செழியனும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யா கோபி மீது கொடுத்த கேஸ்க்காக வீட்டுக்கு நோட்டீஸ் வருகிறது. இதை பார்த்த ஈஸ்வரி நீ இன்னும் அந்த கேஸை வாபஸ் வாங்கவில்லையா என்று பாக்யாவிடம் கேட்க, கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது வாபஸ் வாங்க முடியாது என்று செழியன் சொல்கிறான். ஆனாலும் மகன் பாசத்தில், ஈஸ்வரி பாக்யாவை கண்டமேனிக்கு திட்டி தீர்க்கிறாள்.
ஈஸ்வரி திட்டுவதை பார்த்துக்கொண்டிருந்த எழில் ஒரு கட்டத்தில் அம்மா ரெஸ்டாரண்டில் கண்ணீர்விட்டபோது நீங்கள் என்ன செய்துகொண்டு இருந்தீங்க என்று கேட்க, இதற்கு பதில் சொல்லாத ஈஸ்வரி நீ உங்க அம்மாவுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ என்று எழிலையும் திட்டுகிறாள். இனியா தனது பங்குக்கு நீ ஓவர பண்றமா, அப்பா ஜெயிலுக்கு போகனுமா? என்று கோபப்பட்டு திட்டிவிடுகிறாள்.
அதன்பிறகு ரூமுக்குள் சென்றுள்ள கோபி, நான் ஜெயிலுக்கு போய்விட்டால், மயூ படிப்பு, இனியா கல்யாணம் எல்லாம் ப்ளான் பண்ணி வச்சிருக்கேன் என்று ராதிகாவிடம் சொல்ல, அப்படியெல்லாம்ஒன்றும் நடக்காது தமிழ்நாட்டில் பெரிய வக்கீலை ஹையர் பண்ணிருக்கேன் என்று சொல்கிறாள். அதன்பிறகு கோபி பாக்யா பற்றி பேசிக்கொண்டிருக்க, பாக்யா பற்றி ஏற்கனவே நீங்கள் தெரிந்துகொண்டிருந்தால், இப்படி நடந்திருக்கதே என்று ராதிகா சொல்கிறாள்.
இதை கேட்ட கோபி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க, அடுத்த நாள் காலையில் கோபிக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று ஈஸ்வரி சாமி கும்பிடுகிறார். அதன்பிறகு சமையல்கட்டில் பாக்யாவிடம் ஈஸ்வரி பேசிக்கொண்டிருக்க, கோபியும் ராதிகாவும் கீழே இறங்கி வருகின்றனர். அப்போது ராதிகா, கோர்ட்டுக்கு போக வேண்டாம். பாக்யாவும் ராதிகாவுக்கும் ப்ரண்டு. அவங்க ப்ளான் பண்ணி உன்னை ஜெயிலில் தள்ளிடுவாங்க என்று சொல்கிறாள்.
மேலும் கோபிக்கு எது நடந்தாலும் நான் உயிருடன் இருக்க மாட்டேன். கோபி இப்போது திருந்திவிட்டான். ஆனால் அவனை மீண்டும் மீண்டும் துரத்தி அடிக்க வேண்டுமா? இந்த பாவம் உன்னை சும்மா விடாது பாக்யா என்று ஈஸ்வரி சாபம் விடுகிறாள். கடைசியாக பாக்யாவும் கோபியும் நீதிமன்றத்தில் ஆஜராக அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.