பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா, ஆகாஷூடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பாக்யா அவரை திட்டும் நிலையில், பாக்யாவிற்காக கோபி செய்யும் செயல்கள் அனைத்தும் ஈஸ்வரிக்கு எரிச்சலை கொடுக்கிறது.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யா ஈஸ்வரியை சாப்பிட, கூப்பிட, ஈஸ்வரி கோபமாப வர முடியாது என்று சொல்கிறார். சாப்பிட்டுவிட்டு மாத்திர போட வேண்டும் என்று பாக்ய சொல்ல, நான் எப்படி போன உனக்கு என்ன, என்னை தான் வீட்டை விட்டு போக சொல்லிட்டியே என்று ஈஸ்வரி சொல்ல, நீங்கள் என்னை கேட்ட கேள்விக்கு தான் நான் பதில் சொன்னேன் என்று பாக்யா சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி சாப்பிட முடியாது என்று சொல்கிறார்.
அதன்பிறகு வெளியில் வரும் பாக்யா இனியாவிடம், சாப்பிட சொல்ல, எழுதும் வேலை இருக்கிறது முடித்துவிட்டு சாப்பிடுகிறேன் என்று சொல்ல, நீ சாப்பிடும்போது பாட்டிக்கு சாப்பாடு கொடு, அவங்க சாப்பிடலனா உங்க அப்பாக்கிட்ட சொல்லு என்று சொல்கிறார். அதன்பிறகு ஈஸ்வரிக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள் குறித்து இனியாவிடம் சொல்லிவிட்டு பாக்யா ரெஸ்டாரண்ட்க்கு கிளம்புகிறார். பாக்யா போனதும் இனியா, ஆகாஷூடன் போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் பாக்யா போன் செய்ய. போன் பிஸி என்று வர, இந்த நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்ற சந்தேகம் வருகிறது. அதற்கு செல்வி தனது மகனும், இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று சொல்ல, பாக்யா மீண்டும் இனியாவுக்கு போன் செய்கிறார். அப்போதும் பிஸி என்று வர, டென்ஷன் ஆகும் பாக்யா போனை வைத்துவிடுகிறார். அதன்பிறகு வீட்டில் கோபி ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுக்க, அந்த நேரத்தில் பாக்யா வீட்டுக்கு வர ஈஸ்வரி எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று எழுந்திருக்கிறார்.
இதை பார்த்த கோபி அம்மா சாப்பிட்டாங்க டோன்டஒரி என்று சொல்கிறார். அதன்பிறகு இனியா பாக்யாவிடம், நீ வரும் முன்பு பாட்டி நல்லதான் சாப்பிட்டு இருந்தாங்க நீ வந்தவுடன் எழுந்திருக்கிறாங்க, நீ எத்தனையோ முறை பாட்டியை பார்க்க ரெஸ்டாரண்டில் இருந்து வந்துருக்க, ஆனால் இன்று, அப்பா வந்ததால், அவருக்கு கஷ்டம் கொடுப்பதாக பாட்டி நினைக்கிறாங்க என்று இனியா சொல்கிறார். அப்போது பாக்யா நீ யாருக்கிட்ட போனில் பேசிக்கிட்டு இருக்க எப்போதும் பிஸி பிஸினு வருது என்று கேட்க, அதற்கு இனியா நான் எந்த தப்பும் பண்ணலமா என்று சொல்ல, தப்பு பண்ணலனா சந்தோஷம் தான் என்று சொல்கிறார்.
அடுத்து இரவு, பாக்யா கணக்கு பார்த்துக்கொண்டிருக்க, அங்கு வரும்கோபி, இரவு தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று ஒரு கப் காபி போட்டு கொடுக்கிறார். மறுநாள் காலையில் செல்வி கிச்சனில் வேலை பார்க்கும்போது பாக்யாவிடம் உடம்பு சரியில்லையா என்று கேட்க, அப்போது ஈஸ்வரி இந்த காபி யாருக்கு என்று கேட்கிறார். அப்போது பாக்யா காப்பி குடிக்கவில்லை என்று கோபிக்கு தெரியவருகிறது. அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.