பாக்கியலட்சுமி சீரியலில், இனியா ஆகாஷ் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர, செல்வியை பாக்யா வீட்டில் இருந்து அசிங்கப்படுத்தி அனுப்பிவிடுகின்றனர். கோபியும் இனியாவுக்கு எச்சரிக்கை கொடுக்க, இங்கு ஆகாஷை செல்வி போட்டு அடிக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்றைய எபிசோட்டில் எனன நடந்தது என்பதை பார்ப்போம்.
எபிசோட்டின் தொடக்கத்தில் ஆகாஷை போட்டு அடிக்கும் செல்வி, இதுக்குதான் நீ ரெஸ்டாரண்ட்க்கு வந்தியா? போன் பேசும்போதேல்லாம் இனியா கூடத்தான் பேசிட்டு இருந்தியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டியேடா? இனிமேல் எப்படி அவங்க முகத்தில் முழிப்பேன். என்று திட்டிக்கொண்டே அடித்துக்கொண்டு இருக்கிறாள். மறுபக்கம் ஈஸ்வரி ராமமூர்த்தியின் போட்டோவை பார்த்து அழுது புலம்பிக்கொண்டிருக்க, எழில் இனியாவை உள்ளே போக சொல்கிறான்.
எழிலின் பேச்சை கேட்காத இனியா அங்கேயே நிற்க, போனை எடுத்துக்கொண்டு போ என்று எழில் சொல்ல, இனிமேல் நீ போன் யூஸ் பண்ண கூடாது, காலேஜ்ல நாங்கதான் ட்ராப் பண்ணுவோம் நாங்கதான் கூட்டிக்கிட்டு வருவோம் என்று கோபி சொல்கிறான். இதை கேட்ட செழியன் அப்பா சொன்ன மாதிரி நடந்துகொண்டால் உனக்கு நல்லது இல்லை என்றால் நடக்கறதே வேற என்று சொல்லி மிரட்டுகிறான். அப்போது எழில் இனியாவுக்கு சப்போர்ட் செய்ய, கோபியும் செழியனும் போகப்படுகின்றனர்.
மறுபக்கம், பாக்யாவிடம் வரும் இனியா, நீ ஏன்மா ஒன்னும் பேசமா இருக்க, எதாவது பேசுமா நான் செய்தது தப்பு தான் என்னை திட்டுமா என்று சொல்லிவிட்டு, ஆகாஷூம் நானும் முதலில் பிரண்டாகத்தான் பழகினோம். நான் தான் அவனிடம் பிடித்திருக்கிறது என்று சொன்னேன். உங்க அம்மா தான் என்னை படிக்க வைக்கிறாங்க, நான் எப்படி இதெல்லாம் செய்ய முடியும் என்று அவன் மறுத்தான் நான் தான் அவனை கன்வின்ஸ் பண்ணினேன் என்று சொல்கிறாள்.
இதை கேட்ட பாக்யா, உன்னால சும்மா இருக்கவே முடியாத? உன்னை நம்பி எங்கேல்லாம் விட்டேனே அங்கெல்லாம் எனக்கு கெட்ட பெயரைத்தான் வாங்கி கொடுத்திருக்க, மாசத்துக்கு ரெட்டு பிரச்னை உன்னால வருது. உன்னால மட்டும் தான் பிரச்னை வருது. இந்த வயதில் உனக்கு கல்யாணம் கேக்குதா என்று கேட்க, எழில் பாக்யாவை சமாதானம் செய்கிறான். அதனைத் தொடர்ந்து செல்வி போன் செய்ய பாக்யா போனை எடுக்கவில்லை. இருந்தாதலும் அழுதுகொண்டே செல்வி போன் செய்ய அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.