/indian-express-tamil/media/media_files/2025/03/29/K0jMcGRxXfNNaKcXbIJi.jpg)
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ்ஜை ஏமாற்றிய கதிரை முத்து பிடித்த நிலையில், சிட்டி ரோஹினியை பிளாக்மெயில் செய்வதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், சிட்டி ரோஹினிக்கு கால் செய்து, முத்துவின் கார் சாவி வேண்டும் என்று கேட்க, ஏற்கனவே போன் எடுத்து பெரிய பிரச்னையில் இருக்கிறேன். கார் சாவி எடுக்க முடியாது என்று சொல்ல, உங்க பழைய பி.ஏ.வால் எதுவும் பிரச்னை வரகூடாது அப்படினா இதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்று சொல்கிறான். மேலும், வீட்டில் விஜயா ரோஹினியிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும் சொல்லி பிளாக்மெயில் செய்ய,ரோஹினி ஒப்புக்கொள்கிறாள்.
இந்த பக்கம் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க வரும், முருகன் வித்யா இருவரும், முத்துவுக்கு போன் செய்து வர சொல்ல, அவனும் வருகிறான. இதனிடையே, மனோஜ்ஜை ஏமாற்றிய கதிர், முருகனிடம் அட்வான்ஸ் கொடுக்கிறீங்களா என்று கேட்க, தெரிந்தவர் வர வேண்டும் என்று சொல்லி நிறுத்துகின்றனர். இதனால் கதிரும் அவரது மனைவியும், சீக்கரம் கிளம்பளாம்னு பார்த்தா விடமாட்ராங்களே என்று பேசிக்கொள்ள, நாம அவசரப்பட்டா அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்று யோசிக்கின்றனர்.
அதன்பிறகு, கதிர் தனது மனைவியுடன் வெளியில் போயிவிட்டு வருவதாக சொல்லி கிளம்ப, இந்த நேரத்தில், முத்து மீனா இருவரும் அங்கு வருகின்றனர். முருகன் இருவரிடமும் முத்து பணத்தை பற்றி பேச, கதிரும் அவனது மனைவியும் உள்ளே வர, மீனா இவர்தான் உங்க அண்ணனை ஏமாற்றியவர் என்று சொன்னவுடன், கதிரை அடித்து உள்ளே இழுத்து போடுகிறான் முத்து. கதிர் பற்றிய உண்மை தெரிந்த முருகன் முத்துவுக்கு நன்றி சொல்கிறான். கதிரிடம் மனோஜ் பணம் எங்க என்று கேட்க, செலவாகிவிட்டதாக சொல்கிறான்.
அதன்பிறகு கதிரை போலீசில் ஒப்படைக்க, முடிவு செய்து, மனோஜ்க்கு தகவல் கொடுக்க, அவன் ரோஹினியுடன் அங்கு வந்து கதிர் மற்றும் அவனது மனைவியை அடித்து வெளுக்கின்றனர். அதன்பிறகு போலீஸ் அங்கு வந்துவிடுகிறது. கதிரை போலீஸில் ஒப்படைத்துவிட்டு 4 பேரும் வீட்டுக்கு வருகின்றனர். முத்து நடந்ததை வீட்டில் சொல்கிறான். அப்போது விஜயா பணம்கிடைத்துவிடுமா என்று கேட்க, இவங்களாதான் பணம்இப்போ கிடைக்காம போய்டுச்சி என்று சொல்கிறாள்.
இவங்க போலீஸ்க்கு சொல்லாம இருந்திருந்த, இவனை அடிச்சி பணத்தை வாங்கியிருக்கலாம் என்று சொல்ல, நாம என்ன ரவுடியா கட்டபஞ்சாயத்து பண்ண, போலீஸ் இருக்காங்களே அவங்க பணத்தை வாங்கி கொடுப்பாங்க என்று முத்து சொல்கிறான். அதை கேட்ட ஸ்ருதியும் ஆமாம் முத்து சொல்வது தான் சரி என்று சொல்கிறாள். அவனே பணத்தை செலவழிச்சிட்டேனு சொல்கிறான். நாம அடிச்சா மட்டும் கொடுத்திடவா போறான். அதனால் போலீஸிடம் போனாதான் சரியாக இருக்கும் என்று ஸ்ருதி சொல்ல, ரோஹினி கோபப்பட அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.