பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் ரெஸ்டாரண்டில், கெட்டுப்போன இறைச்சியை கலந்ததாக கோபி மீது பாக்யா புகார் கொடுக்க, கோபி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஈஸ்வரி செழியன் உள்ளிட்ட அனைவருமே பாக்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபியை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் அழைத்துச்செல்ல, பாக்யா மற்றும் ராதிகாவின் வீட்டில் பரபரப்பு ஏற்படுகிறது. பாக்யா வீட்டில் மொத்த குடும்பமும் பாக்யா புகார் கொடுத்தது குறித்து அவரை திட்டிக்கொண்டு இருக்கின்றனர். இந்த பக்கம் ராதிகாவின் அம்மா கோபிக்கு சப்போர்ட்டாக இருக்க, அவரது மகனை போன் செய்து அழைக்கிறார். ஆனால் அவன் நான் வரவில்லை வக்கீலை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லிவிடுகிறான்.
அதன்பிறகு, ராதிகாவின் அம்மா கமலா, ராதிகாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கிறார். தப்பு பண்ணது அவரு அனுபவிக்கட்டும் என்று ராதிகா சொல்ல, கமலா கோபிக்கு சப்போட்டாக பேசுகிறார். நீ ரெஸ்டாரண்ட் வச்சி, அதில் இதே மாதிரி எதாவது நடந்திருந்தால் சும்மா இருப்பியா? அவருக்கான நான் போலீஸ் டேஷன் வாசலுக்கு வரமாட்டேன் என் மகளுடன் நான் தனியாக வாழ்ந்துகொள்ள முடியும் என்று ராதிகா அம்மா கமலாவிடம் சொல்கிறாள்.
இந்த பக்கம் பாக்யா வீ்ட்டில் எழில் நடந்த விஷயங்களுக்கான பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறான். அதற்கு பாக்யா பசங்களோட சந்தோஷத்தை தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை என்று சொல்லி அவனை சமாதானம் செய்கிறாள். அதன்பிறகு பாக்யா அங்கிருந்து கிளம்ப, ஈஸ்வரி மீண்டும் கோபி விஷயத்தில் நீ இப்படி செய்தது தவறு என்று சொல்கிறார். ஆனால் பாக்யா உப்பை திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லிவிடுகிறாள்.
பாக்யாவின் பேச்சை கேட்டு ஈஸ்வரி உள்ளே செல்ல, நீ பண்றது எதுவுமே சரியில்லமா என்று செழியன் சொல்லிவிட்டு போகிறான். இனியாவும் உன்னை எனக்கு பிடிக்கவே இல்லைமா என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் கோபி தன் மீது எந்த தவறும் இல்லை என்று போலீஸிடம் சொல்ல, ஆனந்த் வந்து கோபி சொல்லித்தான் கெட்டுப்போன இறைச்சியை கலந்தேன் என்று சொல்கிறான். இதனால் கோபி ஷாக் ஆக, எப்.ஐ.ஆர் போடுவதாக போலீஸ் சொல்கின்றனர். கோபி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்திருக்கிறான்.
அப்போது அங்கு வரும் செந்தில், வக்கீலிடம் பேசியிருப்பதாக சொல்கிறான். கோபியும் நான் இன்னைக்கே வெளியில் வந்தாகனும் என்று சொல்ல, இந்த பக்கம் எழில் எனக்கு இந்த பட வாய்ப்பு வேண்டாம் என்று சொல்லப்போவதாக பாக்யாவிடம் சொல்கிறான். அதை கேட்ட பாக்யா, உன் அப்பா தானே அவர் கடமையை செய்திருக்கிறார். அதனால் நீ இந்த படத்தை பண்ணணும் என்று சொல்ல அத்துடன் எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“