/indian-express-tamil/media/media_files/2025/05/07/rLWmSBAOz2uh9r2dasVD.jpg)
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீப காலமாக, இனியாவின் மாமனாருக்கும், பாக்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாக்யா இவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் தொடங்கி தொழிலதிபராக வலம் வந்த பாக்யாவுக்கு செக் வைக்கும் வகையில் அவரது ரெஸ்டாரண்டடை விலைக்கு கேட்டவர், பாக்யா கொடுக்க முடியாது என்றதால், இனியாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து அதற்கு வரதட்சனையாக அந்த ரெஸ்டாரண்டை பாக்யாவே இலவசமாக கொடுத்தது போன்று டாக்குமெண்ட் செய்து சூழ்ச்சியில் வாங்கிவிட்டார். இதை வீட்டில் இருப்பவர்களிடம் பாக்யா சொன்னாலும் யாரும் நம்பவில்லை.
இதனைத் தொடர்ந்து வங்கிக்கு சென்று, தனது கடன் பற்றி விசாரித்த பாக்யா, அடுத்து ஒரு ரெஸ்டாரண்ட் தொடங்கும் முயற்சியில் களமிறங்கினார். இதற்காக பல இடங்களை தேடிய அவர், ஒரு வழியாக தற்போது ஒரு இடத்தை பிடித்து அட்வான்ஸ் கொடுத்து, வேலையை தொடங்கிவிட்டார். இது குறித்து வெளியாகியுள்ள அடுத்தடுத்த எபிசோடுகளுக்கான ப்ரமோவில், பாக்யா ரெஸ்டாரண்ட்க்கான அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு தனது ஆட்களுடன் வேலையை தொடங்குகிறார்.
இதை ரோட்டில் இருந்து கோபி பார்க்கிறார். அதன்பிறகு, வீட்டுக்கு வந்து தனது சம்பந்தி சுதாகரிடம், நான் புதிதா ஒரு ரெஸ்டாரண்ட் தொடங்க போகிறேன் என்று சொல்ல, அவர் அதிர்ச்சியாகிறார். அதன்பிறகு இனியாவோட அம்மா கையேந்திபவன் நடத்துராங்க என்று கேட்டால் நான் என்ன செய்வது என்று அவர் கேட்க, என் சம்பந்தி ஒரு ரெஸ்டாரண்ட் வைத்து தொழிலதிபரா இருந்தாங்க, ஆன இப்போ சாதாரணமாக ஆகிட்டாங்க, அதற்கு காரணம் நான் தான். குறுக்கு வழியில், அவர் ரெஸ்டாரண்ட் வாங்கிக்கொண்டேன் என்று சொல்லுங்கள் என பாக்யா சொல்கிறார்.
இதை கேட்ட சுதாகர் அதிர்ச்சியடைகிறார். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாக்யா இந்த ரெஸ்டாரண்ட்டை வெற்றிகரமாக தொடங்குவரா? அல்லது சுதாகர் மூலமாக இவருக்கு பிரச்னை வருமா? என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.