Tamil Serial Baakiyalakshmi Episode Update : புதிதாக புடவை வாங்கி வந்து ராதிகாவிடம் கொடுக்கிறான் கோபி. ஆனால் அதை பார்க்கும் ராதிகா இது நான் எடுத்த புடவை இல்லை என்று சொல்கிறாள். இதனால் ஷாக் ஆகும் கோபி சமாளிப்பதற்காக இது நீ எடுத்த புடவைதான் ராதிகா கடையில் லைட்ல வேற கலரா தெரிஞ்சிது இப்போ வேற கலரா தெரியுது என்று சொல்கிறான். இதை கேட்டு கன்பியூஸ் ஆகும் ராதிகா கடையில ஏதே நடந்துருக்கு இது நான் எடுத்த புடவை இல்லை இருந்தாலும் பரவால்ல என்று சொல்லிவிடுகிறான்.
இப்போது நிம்மதி பெருமூச்சு விடும் கோபி தப்பிச்சோம்டா சாமி என்று சொல்லி புலம்பி கொண்டிருக்கிறான். இதற்கிடையே எழிலுக்கு போன் பண்ணும் அமிர்தா நாங்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகுதான் ஊருக்கு வருவதாக சொல்கிறாள். இதன்பிறகு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது இனியா பார்த்துவிடுகிறாள். அவளை பார்த்து எழில் போனை கட் செய்கிறான். அப்போது இனியா இப்போலாம் நீ ரொம்ப போன் பேசுரியே என்று கேட்கிறாள். அப்போது அமிர்தா அக்காகிட்டதான் பேசிக்கிட்டு இருந்தேன்என்று சொல்கிறான்.
இதனிடையே கோபி புடவை வாங்கி கொடுத்ததை நினைத்து பார்க்கும் பாக்யா, அந்த புடவையை கட்டிப்பார்க்கிறாள். அதன்பிறகு அந்த புடவையுடன் கோபியின் அறைக்கு செல்கிறாள். அப்போது கோபி இந்த புடவை ஏன் இப்போ கட்டிருக்க என்று கேட்க, முதல்முறையா புடவை வாங்கி கொடுத்துருக்கீங்க அதான் உங்கசகிட்ட கட்டி காமிக்கலாம்னு தோனுச்சி என்று சொல்கிறாள். அதை கேட்டு கோபி புடவை ரொம்ப நல்லாருக்கு உனக்கு என்று சொல்கிறான்.
இதனையடுத்து காலையில் அனைவரும் காபி குடித்துக்கொண்டிருக்கும்போது நைட் கோபி சொன்னதை நினைத்து பாக்யா தனியாக சிரித்துக்கொண்டிருக்கிறாள். இதை பார்த்து அனைவரும் கிண்டல் செய்கின்றனர். அப்போது இனியா ஸ்கூல் மதர்ஸ்டே குறித்து கேட்கிறாள். ஆனால் பாக்யா நான் வரல என்று சொல்ல ஈஸவரி நான் வரட்டுமா என்று கேட்கிறார். அப்போது செல்வி மதர்ஸ்டேவுக்கு பாட்டி எல்லாம் வரலாமா என்று கேட்கிறாள்
இதனிடையே நீ மதர்ஸ்டேவுக்கு வரலனா நான் உன்கிட்ட பேசவே மாட்டேன் அம்மா என்று இனியா சொல்ல நான் அங்க வந்து என்ன செய்யுறது என்று கேட்கிறாள் பாக்யா. அப்போது எழில் பாக்யாவிடம் நீ போய் பாட்டு பாடுமா என்று சொல்கிறான். அப்போது பாக்யா எனக்கு கூச்சமாக இருக்கும் என்று சொல்ல ஈஸ்வரி சிரிக்கிறார். அதற்கு பாக்யா என்ன கிண்டல் பண்ணா உங்க பாட்டிக்கு எக்ஸ்ராவா சிரிப்பு வரும் என்று சொல்கிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil