Baakiyalakshmi Serial Today Episode : போட்டியின் இறுதி முடிவு அறிவிக்க நடுவர்கள் தயாராகும்பொது இதில் ஏதாவது ஒரு பரிசு அம்மாவுக்கு கிடைக்க வேண்டும் என்று இனியா மனதிற்குள் நினைத்துக்கொள்கிறாள். அதன்பிறகு பரிசு அறிவிக்கும்போது 3-வது பரிசு வேறு ஒருவருக்கு அறிவிக்கப்படுகிறது. இதனால் அப்செட் ஆகும் இனியா 2-வது பரிசு கண்டிப்பாக அம்மாவுக்கு இல்லை என்று நினைக்கிறாள்.
ஆனால் 2-வது பரிசு பாக்யலட்சுமிக்கு வழங்கப்படுகிறது. இதனால் இனியா மிகவும் சந்தோஷமாக எங்க அம்மா பரிசு வாங்கிட்டாங்க என்று நண்பர்களிடம் சொல்லிக்கொள்கிறாள். அதன்பிறகு முதல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு அனுப்பி வைக்கின்றனர். அப்போது ரேகா பாக்யாவை அழைத்து அம்மா பற்றி நீங்கள் பேசுனீங்க உங்களைப்பற்றி நான் பேசுகிறேன் என்று சொல்லி பாக்யா பேசியது குறித்து பெருமிதம் கொள்கிறாள்.
இதை கேட்டு இனியா மிகவும் சந்தோஷத்தில் பாக்யாவை கட்டியனைத்துக்கொள்கிறாள். அப்போ ரேகா இனியா நீ மிகவும் கொடுத்து வைத்தவள் உணக்கு நல்ல அம்மா கிடைத்திருக்கிறா. நீ மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லிவிட்டு பாக்யாவுடன் செல்பி எடுத்துக்கொள்கிறாள். அதன்பிறகு வீட்டிற்கு வரும் இனியா ஸ்கூலில் நடந்த்தை பெருமையாகதாத்தா பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
இதை கேட்டு ஈஸ்வரி முகம் சுழிக்க, அந்த நேரத்தில் கோபி அங்கு வருகிறான். அப்போது இனியா கோபியிடம் பாக்யா பரிசு வாங்கியது குறித்து சொல்கிறாள். இதை கேட்டு ஆச்சரியப்படும் கோபி அப்படியா என்று கேட்கிறான். அதற்கு ஆமாங்க என்று சொல்லும் பாக்யா அந்த பரிசை எடுத்து வந்து கோபியிடம் காண்பிக்கிறாள். இதை பார்த்து மகழ்ச்சியாகும் கோபி வாழ்த்து சொல்கிறான்.
அப்போது ஈஸ்வரி வழக்கம்போல பாக்யாவை கிண்டல் செய்வது போல் பேசுகிறாள். ஆனால் ஈஸ்ரியை திட்டும் இனியா அம்மாவுக்கு சப்போர்ட் செய்கிறாள். அப்போது ஈஸ்வரியின் கணவன் ஈஸ்வரியை திட்டுகிறான். இதை கேட்டு அனைவரும் சிரிக்க கோபி பாக்யாவிடம் சென்று தோலை தட்டிக்கொடுத்து வாழ்த்துக்களை சொல்கிறான். அதை கேட்டு சந்தோஷப்படும் பாக்யா இதுபோதும் என்று சொல்லி சந்தோஷப்படுகிறாள்.
அதன்பிறகு இரவில் இனியாவும் பாக்யாவும் தூங்க செல்லும்போது பாக்யா ஸ்கூலில் நடந்த விஷயஙகள் குறித்து இனியாவிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அதை கேட்டு கடுப்பாகும் இனியா தூங்குமா எத்தனை தடவ இதையே சொல்லுவ என்று சொல்லிவிட்டு தூங்குகிறாள். அதன்பிறகு பாக்யா தூங்காமல் அந்த அவார்டையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
விடிந்தவுடன் செல்வி வீட்டிற்கு வருகிறாள். அப்போது பாக்யாவிடம் நேற்றைய பங்ஷன் குறித்து கேட்கிறாள். அப்போது பாக்யா தனது பரிசை கொண்டுவந்து காட்டுகிறாள். அதன்பிறகு பரிசு குறித்து இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் இனியா பாக்யா கழுத்தில் மெடல் இருப்பதை பார்த்து சிரிக்கிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil