சின்னத்திரையின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுல்லேட்டி சீரியலில்ல இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் பெரிய எதிபார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சீரியலில் கோபியின் 2-வது மனைவி ராதிகா கேரக்டரில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுல்லேட்டி. முதலில் நடிகை ஜெனிபர் இந்த கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த கேரக்டர் நெகடீவ் பாதையை நோக்கி செல்வதால், இது செட் ஆகாது என்று ஜெனிபர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக ரேஷ்மா ராதிகா கேரக்டரில் நடித்து வந்த நிலையில், தற்போது ஜீ தமிழின் புதிய சீரியலில் வெயிட்டான வில்லி வேடத்தில் நடிக்க ரேஷ்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் மாற்றம் வரப்போகிறது.

அதன்படி, ரேஷ்மா நடித்து வந்த ராதிகா கேரக்டரில் இனி அவருக்கு பதிலாக நடிகை வனிதா ராதிகா கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ், பிபி ஜோடிகள், குக் வித் கோமாளி என விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த வனிதா ஜீ தமிழின் ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இதனிடையே தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வனிதா வில்லியாக களமிறங்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/