Tamil Serial Baakiyalakshmi : இனியா ஸ்கூலில் சமையல் வேலை செய்த்தால் கிடைத்த பணத்தில் பாக்யா வீட்டில் இருக்கும் அணைவருக்கும் டிரெஸ் எடுத்துக்கொடுக்கிறாள். இதை பார்த்து அனைவரும் சந்தோசம் அடைகின்றனர். ஆனால் இனியா தனக்கு எடுத்த டிரெஸ் பிடிக்கவில்லை என்று கூறி கோபமாக ரூம் உள்ளே செல்கிறாள். அப்போது அங்கு வரும் கோபியிடம், சட்டையை கொடுக்கிறாள் பாக்யா.
அதை வாங்கிவிட்டு அமைதியாக அவன் செல்லும் போது, சட்டையை திறந்து பாருடா என அவன் அப்பா சொல்கிறார். அதற்கு கோபி, என்ன இருக்க போகுது.. நான் பார்க்காதா சட்டையா? என கோபமாக சொல்லிவிட்டு உள்ளே செல்கிறான். அதன்பிறகு அறைக்குள் வரும் கோபி, முதன்முறையா அவ எனக்கு சட்டை எடுத்து கொடுத்து இருக்கா. அதை அன்பா வாங்காம திட்டிவிட்டேன் என வேதனையுடன் சட்டையை திறந்து பார்க்கிறான்.
அப்போது அந்த சட்டை பிடித்துபோகவே, அதை போட்டு பார்க்கிறான். இதற்கிடையே சோகமாக இருக்கும் பாக்யாவை ஈஸ்வரி சமாதானம் செய்கிறாள் ஈஸ்வரி. அப்போது பாக்யா எடுத்துக்கொடுத்த புது சட்டை போட்டு கொண்டு வரும் கோபி, நல்லாருக்கு பாக்யா என சொல்கிறான். அவளும் மகிழ்ச்சியுடன் சூப்பரா இருக்குங்க. பணம் கம்மியா இருந்ததால நீங்க போட மாட்டீங்கன்னு நினைச்சேன் என்கிறாள்.
அதற்கு அவன் அப்படி எல்லாம் இல்லை. எனக்காக நீ முதல்தடவையா இந்த சட்டை வாங்கி கொடுத்து இருக்க. ஆபிஸ் டென்ஷன்ல கத்திட்டேன் சாரி என்கிறான். அப்போது அவள் மிகுந்த சந்தோஷம் அடையும் போது, உனக்கு ஒரு சின்ன விஷயம் போதும் ரெண்டு நாள் சந்தோசம் பட்டுக்குவ என அவளை கிண்டல் செய்கிறாள் ஈஸ்வரி. உன்கிட்ட மட்டும் என் வீட்டுக்காரர் மாதிரியோ, எழில் மாதிரியோ நல்ல விதமா பேசிட்டா, நீ தரையிலயே நிற்க மாட்டா என சொல்கிறாள். அதற்கு பாக்யா போங்க அத்தை நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என சொல்கிறாள்.
அடுத்தநாள் சொன்னபடியே பாக்யா கொடுத்த சட்டையை போட்டுக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பி வருகிறான். அப்போது அவன் அப்பாவும் சட்டை உனக்கு சூப்பரா இருக்குடா என சொல்லும்போது, ராதிகா பாக்யாவிற்கு போன் பண்ணுகிறாள். அவளிடம் நான் அட்வான்ஸ் பணம் கேட்டு இருக்கேன். அவுங்க பெயிண்ட் அடிக்க யூஸ் பண்ணிட்டாங்களா. பணத்தை தர்றேன் சொல்லிருகாங்க என பாக்யா சொல்கிறாள். அப்போது ராதிகா தப்பா நினைச்சுகாதீங்க டீச்சர் அந்த வீட்டை நானே வாங்கிக்கிறேன் என சொல்கிறாள்.
என்னோட சைடுல இருந்து தான் மிஸ்டேக். நான் ஒழுங்கா டாக்குமெண்ட்ட செக் பண்ணல. என்னோட இன்னொரு வக்கீல் டாக்குமெண்ட்ல எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்லிட்டாங்க. அதுனால நானே அந்த வீட்டை வாங்கிக்கிறேன் என்கிறாள். பாக்யா இந்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்லும் போது, உன்னோட பிரெண்ட்க்கு அறிவு இல்லையா என சத்தம் போடுகிறான் கோபி அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil