விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர் விகாஸ் தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் டீச்சராக என்ட்ரி கொடுத்துள்ளார்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. வாரம் வாரம் வெளியாகும் திரைப்படங்களை வி்ட, அடுத்து சினனத்திரையில் புதிதாக வரும் சீரயில் எது, எந்த சீரியலில் இருந்து யார் வெளியேறிவிட்டார். இந்த சேனல் சீரியலில் நடித்த நடிகர் புதிதாக எந்த சேனல் சீரியிலல் கமிட் ஆகியுள்ளார் என்பது தொடர்பான தகவல்களே இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றன.
இதனை புரிந்துகொண்ட சேனல்களும், அவ்வப்போது புதிய சீரியல்களை ஒளிபரப்புவது, மற்ற சேனல்களில் நன்றாக நடித்து வரும் நடிகர்களை தங்கள் சேனல் சீரயிலில் கமிட் செய்வது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறனர். இதில் குறிப்பாக விஜய் டிவிக்கும் சன்டிவிக்கும் இடையில் தான் போட்டி அதிகரிக்கும். இவர்களுக்கு அடுத்தப்படியாக, ஜீ தமிழ் சீரியல்கள் உள்ளது. முன்னணி சேனல்களுக்கு இணையாக ஜீ தமிழும் சுவாரஸ்யமான சேனல்களை ஒளிபரப்பி வருகிறது.
அந்த வகையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் அண்ணா. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், பூவிலங்கு மோகன் வில்லனாக நடித்து வருகிறார் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், தங்கைகளின் வாழ்க்கைக்காக போராடும் அண்ணன் கேரக்டரில் மிர்ச்சி செந்தில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீரியலில், மிர்ச்சி செந்தில் நடித்து வரும் சண்முகம் கேரக்டருக்கு அப்பா வைகுண்டம் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் ரேசாரியோ. இவர், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனார் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் இறந்தது போல் காட்சி அமைக்கப்பட்டது.
பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டரில் நடித்து வந்த ரொசாரியோ தற்போது அண்ணா சீரியலில் வைகுண்டம் கேரக்டரில் நடித்து வரும் நிலையில், அவரைபோல், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து மற்றொரு நடிகர் அண்ணா சீரியலில் களமிறங்கியுள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மகன் செழியன் கேரக்டரில் நடித்து வரும நடிகர் விகாஸ் அண்ணா சீரியலில் அறிவழகன் என்ற கேரக்டரில் கமிட் ஆகியுள்ளார்.
வாத்தியராக என்ட்ரி கொடுத்துள்ள இவர், சண்முகத்தின் தங்கை ரத்னாவின் பள்ளி பருவ காதலனாகவும் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ஒரு வாத்தியாரை காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது, பிரிந்து வாழும் ரத்னா, தனது பள்ளி பருவ காதலை புதுப்பித்துக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.