Advertisment

விலகிய வி.ஜே.விஷால் : எழில் கேரக்டருக்கு வந்த புது நடிகர் : பாக்யலட்சுமி சீரியல் புது அப்டேட்!

ராதிகா கர்ப்பம் காரணமாக கோபி பாக்யா வீட்டை காலி செய்துவிட்ட நிலையில், இந்த வேண்டாம் என்று சொன்ன ஈஸ்வரியும் கோபிக்கு ஆதரவாக அவருடன் சென்றுவிட்டார்.

author-image
WebDesk
New Update
ezhil charactor baakiyalakshmi

வி.ஜே.விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில், எழில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வி.ஜே.விஷால் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக புதிய நடிகர் என்ட்ரி ஆகியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா சொந்தமான ரெஸ்டாரண்ட் வைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

மறுபக்கம் கோபி பிஸினஸை விட்டுவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு பாக்யாவுக்கு எதிரான ஹோட்டல் தொடங்கியுள்ளார். ஏற்கனவே செழியனக்கு பிறந்த குழந்தையால் தாத்தா ஆகிவிட்ட கோபி, தற்போது ராதிகாவின் கர்ப்பத்தால் மீண்டும் அப்பா ஆக உள்ளார். இந்த கர்ப்பம் காரணமாக கோபி பாக்யா வீட்டை காலி செய்துவிட்ட நிலையில், இந்த வேண்டாம் என்று சொன்ன ஈஸ்வரியும் கோபிக்கு ஆதரவாக அவருடன் சென்றுவிட்டார்.

இதனிடையே இந்த சீரியலில், கோபியின் இளையமகன் எழில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வி.ஜே.விஷால் சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக ஈரமானா ரோஜாவே சீரியலில் நடித்து வந்த நடிகர் நவீன் கமிட் ஆகியுள்ளார். சீரியல் தொடங்கிய முதல் நாளே அவர், தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போவதாக கூறி பாக்யா மற்றும் தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செல்கிறார். திடீரென வி.ஜே.விஷால் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே செழியன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஆர்யன் சீரியலில் இருந்து விலகி தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் அமிர்தா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரித்திகா தமிழ் செல்வி சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது வி.ஜே.விஷாலும் விலகியுள்ளார். இவர் எதனால் விலகினார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment