Advertisment

4 வருஷத்துக்கு முன்... பாக்கியலட்சுமி ஆடிஷனில்... நடிகை புகைப்படம் வைரல்

பாக்கியலட்சுமி சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்கி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், விரைவில் தனது 1000-வது எபிசோட்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi1

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்து வரும் நடிகை நேகா தான் ஆடிஷனுக்கு சென்ற போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சுசித்ரா, ரோசாரியா, சதீஷ், விஜே விஷால் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

பொருட்காட்சி கேண்டீன் நல்லபடியாக சென்றாலும், அமிர்தா – எழில் வாழ்க்கையில் கணேஷ், செழியன் – ஜெனி வாழ்க்கையில் மாலினி என தனது இரு மகன்களின் வாழ்க்கையிலும் இருக்கும் சிக்கலை பாக்யா எப்படி தீர்க்கப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாக்யாவுக்கு கோபி ஈஸ்வரி என்ன தொல்லை தருவார்கள், ராதிகா என்ன செய்வார் என்பது பெரும் குறித்து பரபரப்பு நிலவி வருகிறது.

இதனிடையே பாக்கியலட்சுமி சீரியல் தனது ஒளிபரப்பை தொடங்கி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், விரைவில் தனது 1000-வது எபிசோட்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த நாளை சீரியல் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கேரக்டரில் நடித்து வரும் நடிகை நேகா மேனன், 4 வருடங்களுக்கு முன்பு தான் பாக்கியலட்சுமி சீரியலின் ஆடிஷனில் பங்கேற்றபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இனியா கேரக்டரின் ஆடிஷனுக்காக சென்றபோது எடுத்த படம்.

ஒரு முக்கியமான மற்றும் சிறந்த தருணத்தில் இதை பதிவிட வைத்திருந்தேன். பாக்கியலட்சுமி சீரியலின் இந்த தருணத்தில் பதிவிடுவது சரியாக இருக்கும். அற்புதமான மனிதர்களுடன் இந்த பயணம் 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பாக்கியலட்சுமி சீரியல் டீம்,  ரசிகர்கள் என்னை ஊக்கப்படுத்திய குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. பாக்கியலட்சுமி சீரியலில் என்னுடைய பங்கு இருப்பதை நனைத்து பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment