கலர்ஸ் தமிழ் டி.வி-யில் பாக்கியலட்சுமி சீரியல்: மாப்பிள்ளை அவரு; சட்டை என்னோடது!

கோபி – பழனிச்சாமி, ராதிகா – கோபி, பாக்யா கோபி என அனைத்து காமினேஷனும் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது.

கோபி – பழனிச்சாமி, ராதிகா – கோபி, பாக்யா கோபி என அனைத்து காமினேஷனும் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் நாள் தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதே பெயரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையின் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பெங்காலியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஸ்ரீமோயி தொடரின் ரீமேக்கான இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுசித்ரா, சதீஷ் ரேஷ்மா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது இந்த சீரியலில் நடிகர் ரஞ்சித் பழனிச்சாமி என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில், கோபி – பழனிச்சாமி, ராதிகா – கோபி, பாக்யா  கோபி என அனைத்து காமினேஷனும் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமாக கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ்க்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் கோபி இல்லை என்றால் பாக்கலட்சுமி சீரியலே இல்லை என்று கூறி வருகின்றனர்.

Advertisment
Advertisements

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இனி கலர்ஸ தமிழ் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தல் வெளியாகி ஹிட்டடித்த 2 சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த இரண்டு சீரியல்களில் ஒன்றுக்கு பாக்கியலட்சுமி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் மட்டும் தான் ஒன்று ஆனால் இரண்டு கதைகளும் வேறு என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: