Tamil Serial News Update : தமிழில் சமீப காலமாக சீரியல் ஜோடிகள் தங்களது நிஜ வாழ்கையில் இணைந்து வரும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது புது ஜோடியாக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரும், ராஜா ராணி சீரியல் நடிகையும் திருமணம் செய்துகொண்டனர்.
தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் அனைத்து சீரியலிகளும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு சீரியலுக்கும் குறிப்பிட்ட அளவில் ரசிகர்கள் தங்களது ஆதரவை அளித்து வருகினறனர். மேலும் தமிழில் ஹிட்டான படங்களில் பெயரைகளை சீரியலுக்கு பயன்படுத்துவதால் ரசிகர்கள் மனதில் சீரியல் எளிதில் பிரபலமாகி விடுகிறது.
அந்த வகையில் விஜய்டிவியின் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல் பாரதி கண்ணம்மா. சமீப காலமாக இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவையே டார்ச்சர் செய்யும் வேடத்தில் துர்கா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரவீன். இதற்கு முன்பாக விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே மற்றும் ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்த பிரவீன் தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரவீன் ராஜா ராணி சீரியலின் முதல்சீசனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சீரியல் நட்சத்திரங்களாக மதன் – ரேஷ்மா, சபானா ஆர்யன், சித்து – ஸ்ரேயா என சீரியல் ஜோடிகள் வாழ்வில் இணைந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது பிரவீன் ஐஸ்வர்யா இணைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil