scorecardresearch

மருதாணி.. தண்ணீர்… அடுத்து கணவருடன்… வைரலாகும் வில்லி வெண்பாவின் அடுத்த போட்டோஷூட்

Tamil Serial News Update : பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா தனது கணவருடன் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Venba PhotoShoot : விஜய்டிவியின் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகன் நாயகியான பாரதி கண்ணம்மா கதாப்பாத்தரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு முக்கிய காரணம் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த பாரதி கண்ணம்மா இருவரும் பேசிக்கொண்டது, ஒரே வீட்டில் தங்கியது மற்றும் அவர்களக்குள் நடைந்த ரொமான்ஸ் ஆகியவைதான்.

இநத சீரியலில் பாரதி கண்ணம்மா கதாப்பாத்திரத்திற்கு கிடைக்கும் அதே வரவேற்பு வில்லி கதாப்பாத்திரமான வெண்பாவுக்கு கிடைத்து வருகிறது. இதில் பாரதி கண்ணம்மா இருவரும் இத்தனை ஆண்டுகள் பிரிந்திருக்க முக்கிய காரணமே இந்த வெண்பா கேரக்டர்தான். இந்தஅளவிற்கு வில்லத்தனம் நிறைந்த இந்த கேரக்டரில் ஃப்ரினா ஆசாத் நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தாலும். மக்கள் மத்தியில் இந்த கேரக்டர் பிரபலமாகியுள்ளது என்பதே உண்மை.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஃப்ரினா ஆசாத் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அவரது கதாப்பாத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தனர். ஆனால் ஃப்ரீனா அடுத்த நாளே தனது வயிற்றில் மருதாணியால கோலம் போட்டு போட்டோஷூட் செய்திருநதார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு பிறகு தண்ணீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த போட்டோஷூட்க்கு ரசிகர்கள் தாறுமாறாக விமர்சனம் செய்திருந்த நிலையில், ஒரு சிலர் இவருக்கு தவறான வார்த்தைகளால் கமெண்ட் செய்திருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஃப்ரீனா முதல்முறையாக தனது கணவருடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ பதிவை ஃப்ரீனா ஆசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial bharathi kannamma actress farina photoshoot viral