Tamil Serial Actress Kanmani Manoharan Life Story : சின்னத்திரையில் சீரியல்களில் முன்னணியில் இருந்து வருவது பாரதி கண்ணம்மா. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் உள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கணவன் மனைவிக்குள் நடக்கும் சந்தேக போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைச்சப்பட்டுள்ள இந்த சீரியலில், வினுஷா தேவி, (முன்பு ரோஷ்னி ஹரிப்பிரியன்) அருண்பிரசாத் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இவர்களை தவிர்த்து கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன். நாயகன் பாரதியை ஒருதலையாக காதலிக்கும் இவர், அவர் கிடைக்கவில்லை என்றதும், அவருக்கு வில்லியாக மாறுகிறார். அதன்பிறகு பாரதியின் தம்பியை திருமணம் செய்துகொள்ளும் அஞ்சலி கண்ணம்மா பாரதியை பழிவாங்கி நினைக்கிறார். ஒரு கட்டத்தில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே அந்த நேரத்தில் அஞ்சலி கர்ப்பமாகிறார். அதன்பிறகு அவர் தனது தவறான எண்ணங்களை விட்டுவிட்டு திருந்துகிறார்.
இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் கண்மணி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் பேங்க் மேனேஜ்மண்ட் படித்துள்ளார். அதன்பிறகு மீடியா பக்கம் தனது கவனத்தை திருப்பிய அவர் பாரதி கண்ணம்மா சீரியலுக்காக இரண்டுமுறை ஆடிஷனில் பங்கேற்றுள்ளார். அதில் இரண்டாவது முறை தேர்வான இவரை அஞ்சலி என்ற நெகடீவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு முன்பு கேமார முன் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாததால் இந்த கதாப்பாத்திரத்தில் ஏற்று நடிக்க தயக்கம் காட்டியுள்ளார். ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலின இயக்குநர் தனக்கு ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்ததாக கண்மணி கூறியுள்ளார். மேலும் தொடக்கத்தில் நடிக்கும்போது ஏன்டா இந்த சீரியலுக்கு வந்தோம் என்று கஷ்டப்பட்டதாகவும், தற்போது இது பழகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சினிமாவுக்கு வரவில்லை என்றால் பேஷன் டிசைனராக ஆகியிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தொடக்கத்தில் மீடியாவில் வந்ததற்கு அவரது அப்பா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் எதிர்ப்பை மீறி அவர் நடித்து பிரபலமான பின்பு வெளியில் இவரிடம் ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது அவரது அப்பா இதனை பார்த்து ரசித்துள்ளார். அதுவரை டிவி இல்லாத அவர்களது வீட்டில் கண்மணி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவே அவரது அப்பா டிவி வாங்கி வைத்துள்ளார். மேலும் அவரது நிகழ்ச்சி வரும்போது குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் கண்மணி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரம் கிடைத்தால் கண்ப்பாக சினிமாவில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 5 நிமிடங்கள் நடித்தாலும் தனது கேரக்டர் தனியாக தெரிய வேண்டும் அந்த கதாப்பாத்திரங்ளுக்காக காத்திருக்கிறேன் என்று கண்மணி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil