ஹை ஹீல்ஸ் போட்டு கலக்கும் சௌந்தர்யா: மாமியாரே இப்படி ஹீரோயின் ஆயிட்டா குடும்பம் அழகுதான்!

Tamil Serial Update : பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், லட்சுமி ஹேமா இருவரும் சௌந்தர்யா வீட்டில் உள்ளனர்

Tamil Serial Update : பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், லட்சுமி ஹேமா இருவரும் சௌந்தர்யா வீட்டில் உள்ளனர்

author-image
WebDesk
New Update
ஹை ஹீல்ஸ் போட்டு கலக்கும் சௌந்தர்யா: மாமியாரே இப்படி ஹீரோயின் ஆயிட்டா குடும்பம் அழகுதான்!

Bharathi Kannamma Serial Promo Update : விஜய் டிவயில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தினசரி எபிசோடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அருண்பிரசாத், வினுஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் கணவன் மனைவிக்குள் நடக்கும் சந்தேகப்போராட்டத்தை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சீரியலில் நாயகன் அருண்பிரசாத் அம்மா கண்ணம்மாவின் மாமியாராக சௌந்தர்யா கேரக்டரில்நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்று வருபவர்  ரூபாஸ்ரீ. தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் தனது ஆளுமையை செலுத்தி வருகிறார். இந்த சீரியலில் தொடக்கத்தில் நெகடீவ் கலந்த கம்பீரமான கதாப்பாத்திரத்தில் கண்ணம்மாவை வெறுக்கும் மாமியாராக நடித்து வந்த இவர், தற்போது மகன் மற்றும் மருமகளை சேர்த்து வைக்க பாடுபடும் மாமியாராக கலக்கி வருகிறார்.

தற்போது விவாகரத்து கேட்டு கேர்ட்டுக்கு சென்ற பாரதிக்கு கண்ணம்மாவுடன் 6 மாத காலம் ஒன்றாக வாழ வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், லட்சுமி ஹேமா இருவரும் சௌந்தர்யா வீட்டில் உள்ளனர். இதில் நேற்று முன்தினம் வெளியான ப்ரமோவைில் திடீரென குழந்தைகள் ஞாபகம் வந்து பாரதி கண்ணம்மா இருவரும் சௌந்தர்யா வீட்டிற்கு வருகின்றனர்.  இதை பார்த்த சௌந்தர்யா மகிழ்ச்சியில் உள்ளார்.

அதன்பிறகு இருவரும் வீட்டிற்கு கிளம்பும்போது பாரதியுடன் கண்ணம்மாவை காரில் அனுப்பி வைப்பதற்காக சௌந்தர்யா மீண்டும் வீடு திரும்பும் கண்ணம்மாவை, பாரதியுடன் ஒரே காரில் அனுப்புவதற்காக சௌந்தர்யா போடும் நாடகம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மாமியார் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், வீட்டிற்கு வெளியில் அவர்களை வழியனுப்ப வரும் சௌந்தர்யா கரடு முரடான பாதையில் ஹை ஹீல்ஸ் போட்டுகொண்டு செம கெத்து காண்பித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பணக்கார வீட்டு மாமியார் ஹை ஹீல்ஸில் படு ஜோர் என்று கூறி வருகின்றனர்.

Advertisment
Advertisements

மேலும் சௌந்தர்யா இதுவரை செய்த வில்லத்தனத்தை விட இது செமயாக வொர்க்அவுட் ஆகி இருக்கிறது என்று கூறி வருகின்றனர். தற்போது பாரதி கண்ணம்மா இருவரும் மனதளவில் பிரிந்திருந்தாலும் அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ் காட்சிகள் ரசனையாக உள்ளது என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: