தமிழில் வெளியாகும் சீரியல்கள் மட்டுமல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதன் காரணமாக சீரியல் நட்சத்திரங்கள் சீரியல் கடந்த சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் இணைந்துள்ளனர். அந்த அளவிற்கு சீரியலும் சீரியல் நட்சத்திரங்களும் சினிமா நட்சத்திரங்களை விட பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், அருண், ரோஷினி, ரூபாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. சமீப வாரங்களாக இந்த சீரியலில் நாள்தோறும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதிலும் 8 வருடத்திற்கு பிறகு என இந்த சீரியலின் 2-வது சீசன் தொடங்கியதில் இருந்து கதை விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
இதில் நாயகி கண்ணம்மாவின் மகளாக எதார்த்தமான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றுள்ளவர் குழந்தை நட்சத்திரம் ரக்சா (சௌந்தர்ய லட்சுமி), துறுதுறுவென தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ள குழந்தை ரக்சா, பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் என்பது பலரும் அறிந்திராத உண்மை. சன்டிவியின் கோலங்கள் மற்றும் தென்றல் நடித்து கவனம் பெற்றுள்ள ஷியாம், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார்.
தந்தை வழியில் ரக்சாவின் அக்கா நிவாஷினி விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்துள்ளார். இத்தொடரில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது ரஞ்சித் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் செந்தூரப்பூவே சீரியலில் நிவாஷினி கனி ரோலில் நடித்து வருகிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக இந்த சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியா ரெமோ படத்தில், கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்த ரக்சா, தனது நடிப்புக்காக பலரின் பாராட்டுக்களையும் பெற்றர். இந்த படத்தின் நாயகன் சிவகார்த்தியேன் மற்றும் நாயகி கீர்த்தி சுரேஷ் இருவரும், ரக்சாவை விட்டு பிரிவதே இல்லை என்றும், கீர்த்தி சுரேஷ் அவரை அடிக்கடி தூக்கி கொஞ்சுவார் என்று அப்போது கூறப்பட்டது. ரக்சாவின் அக்கா நிவாஷினி ஒரு சீரியல் டப்பிங்குக்காக ஸ்டியோ சென்ற போது அவருடன் சென்ற ரக்சாவை பார்த்த விஜய் டிவி எடிட்டர், ரெமோ பட இயக்குனரிடம் ரக்சாவை பற்றி கூறியுள்ளார்.
அதன்பிறகு ஆடிஷனில் கலந்து கொண்ட ரக்சா, தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இந்த படத்தில் வாய்ப்பு பெற்றுள்ளார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கலக்கி வரும் ரக்சா தனது தந்தை மற்றும் அக்கா இருவரும் தொட முடியாத அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil