சின்னத்திரையில் இந்த சீரியல் எப்போது முடியும்... இதை முடித்தால் அனைவரும் நிம்மதியாக இருப்பார்கள் என்று சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஒரு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தால் கதையே முடிந்துவிடும் ஆனால் அதை செய்யாமல் இப்படி ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு போறீங்களே டைரக்டர் சார் என்று இந்த சீரியலின் தீவிர ரசிகர்களை புலம்ப தொடங்கினார்.
தற்போது சீரியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்தாலும் ரசிகர்கள் இந்த சீரியல் முடிவுக்காகவே காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தற்போது பாரதி கண்ணம்மா முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹேமா லட்சுமி இருவருக்கும் டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்த பாரதி அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.
ஆனாலும் வெண்பாவின் மாஸ்டர் பிளான் காரணமாக ரிசல்ட் வருவதற்கு முன்பே வெண்பாவை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுக்கிறார். ஆனால் கண்ணம்மா குடும்பத்துடன் சென்று பாரதியை தடுத்துவிட்டார். மேலும் உண்மை தெரிந்த பாரதியின் குடும்பத்தினர் பாரதியை வெறுத்து ஒதுக்கிவிட்டனர். இதனால் தற்போது பாரதி தனிமரமாக நிற்கிறார்.
இதனிடையே பாரதியின் இந்த செயலை பார்த்து வெறுத்த ஹேமா தான் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்னை அநாதை ஆசிரமத்தில் விடுங்கள் என்று சொல்லி பெட்டியுடன் கிளம்ப, அப்போது ஹேமா நீ அநாதை இல்லை எனறு கண்ணம்மா சொல்கிறார். அதற்கு வழக்கம்போல் சௌந்தர்யா தடுக்க, சும்மா இருங்க இனிமேலும் சும்மா இருக்க முடியாது என்று கூறி ஹேமா என் அம்மா நான்தான் என்று கண்ணம்மா சொல்லிவிடுகிறார்.
இதனால் மகிழ்ச்சியாகும் ஹேமா அடுத்து பாரதியை என்ன செய்ய போகிறார் என்று எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, மறுபுறம், பாரதியின் டி.என்.ஏ. டெஸ்ட் முடிவு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே ஏற்கனவே இரண்டு முறை வெண்பாவின் சூழ்ச்சியால் மாறிய டி.என்.ஏ டெஸ்ட் ரிசல்ட் இந்த முறை சரியாக வந்து ஹேமா, லட்சுமி இருவரும் பாரதியின் பிள்ளைகள் என்பது தெரியவருகிறது.
இதனால் தன் தவறை உணரும் பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு தனது குடும்பத்துடன் இணைகிறார். குழந்தைகளும் பாரதியை அப்பாவாக ஏற்றுக்கொள்கின்றனர். இதனிடையே பாரதிக்காக தனது குழந்தையை அபார்ட் செய்த வெண்பா, பாரதி தனது குடும்பத்துடன் இணைந்தததால் அவனை பழிவாங்க களமிறங்குவது பாரதி கண்ணம்மாவின் சீசன் 2 ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“