Taml Serial TRB Rating Update : தமிழில் மற்ற சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கதை விறுவிறுப்பான எபிசோடுகள் திடீர் திருப்பம் என விஜய் டிவி சீரியல்களில் தினசரி எப்சோடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது மறுக்க முடியாத உண்மை. மேலும் விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய முன்னணி இடங்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரோஷ்னி அருண் பிரசாத் ஆகிய இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் நாயகியாக நடித்த ரோஷ்னிக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பை அளித்து வந்தனர்.
மேலும் இந்த சீரியலின் வெற்றிக்கு ரோஷ்னியும் முக்கிய காரணம் என்ற நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் பாரதி கண்ணம்மா டாப் 5 ரேட்டிங்கில் வந்துகொண்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷ்னி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரோஷ்னிக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகி தற்போது அவர் நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் ரோஷ்னி வெளியேறிய பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்துள்ளது. நவம்பர் 6 முதல் 12ம் தேதி வரையிலான நாட்களில் சீரியல் ரேட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சன்டிவியின் புதிய அறிமுகமான கயல் சீரியல்10.46 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது இருக்கிறது. தொடர்ந்து சன்டிவியின் சுந்தரி 2-வது இடத்திலும், வனத்தைப்போல சீரியல் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதில் நான்காம் இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் ஐந்தாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த பட்டியலில், 8.83 புள்ளிகள் பெற்றுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் 7-வது இடத்தை பிடித்துள்ளது. ரோஷ்னி நடித்த கடைசி வார எப்சோடுகள் சரிவை சந்தித்துள்ளதால், புதிய கண்ணமமாவாக நடித்து வரும் வினுஷா தேவிக்கு ரசிகர்கள் ஆதரவு எப்படி இருக்குமோ என்ற பதற்றம் சீரியல் குழுவினருடரிடம் தொற்றிக்கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil