என்னா ஜாலியா இருக்குதுங்க… சீரியல்ல பிரிச்சு வச்சு படுத்துறாங்களே..!

Tamil Serial News : பாரதி கண்ணம்மா சீரியலில் கலக்கும் ஹேமா லட்சுமி இருவரும் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Hema Lakshmi Dubsmash : சின்னத்திரையில் ரசிகர்கள் மனதை வென்ற சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டாக்டரான பாரதி படிக்காத கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு கண்ணம்மா கர்ப்பமடையும்போது, பாரதியின் தோழி உணக்கு ஆன்மை இல்லை என்று சொல்ல கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.

இதனையடுத்து வெளியில் வரும் கண்ணம்மா தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க போராடுகிறாள். இதற்கிடையே அவளுக்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. இதில் ஒரு குழந்தையை பாரதியின் அம்மா தூக்கி சென்றுவிட மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடம் வளர்கிறது. லட்சுமி ஹேமா என்ற இரு குழந்தைகளும் பள்ளியில் படிக்கும்போது நட்பாகி இணைபிரியா தோழியாகின்றனர். இதன்பிறகு என்ன நடக்கும் என்ற நாள்தோறும் பாபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டு வருகிறது.

இதில் லட்சுமி மற்றும் ஹேமாவாக நடித்து வரும இரு குழந்தைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இவர்களுக்காக மட்டுமே சீரியலை பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அந்த அளவிற்கு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர்கள், சீரியலில் மட்டுமல்ல நாங்கள் டப்ஸ்மாஷிலும் பின்னி பெடலெடுப்போம் என்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், கிமு படத்தில் வடிவேலு மற்றும் அல்வா வாசு இடையே நடைபெற்ற காமெடி உரையாடலை கச்சிதமாக டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial bharathi kannamma hema lakshmi dubsmash update

Next Story
Tamil Serial News: சந்தியாவுக்கும் சரவணனுக்கும் என்னதான் பிரச்னை… புரியாமல் தவிக்கும் சுந்தரம்!Vijay TV, Vijay TV raja rani 2 serial, raja rani 2, raja rani 2 serial today story, Sandhya Saravanan clash, alya manasa, sidhu, sundaram, sivagami, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடு, சந்தியா, சரவணன், ஆல்யா மானசா, sandhya, alya manasa in raja rani 2, tamil tv serial news, raja rani 2 serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com