வாய்தா வடிவுக்கரசி... 'நிஷா அக்காவை நம்பித்தான் இப்போ இந்த சீரியலே ஓடுது!'
Tamil Serial Update : கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் வினுஷா தேவி நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும், சீரியலில் பெரிய குறை இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Bharathi Kannamma New Entry Nisha Update : விஜய்டிவியில் விறுவிறுப்பாக ரசிகர்ளின் பலத்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது ரசிகர்களை திருப்திப்படுத்த போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Advertisment
விஜய் டிவியின் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த சீரியல் பாரதி கண்ணம்மா. அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த சீரியலில் திரைக்கதையில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. ஆனால் இந்த சீரியலை எந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினார்களே அதை விட 2 மடங்காக தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷ்னி விலகியது மற்றும் வில்லி வெண்பா பிரசவத்திற்காக சீரியலில் இருந்து வெளியேறியதுதான். ஆனால் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் வினுஷா தேவி நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும், சீரியலில் பெரிய குறை இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
வில்லி வெண்பா .இருந்தபோது அவர் செய்யும் சூழ்ச்சிகளும், பாரதி கண்ணம்மா மோதலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது பாரதி கண்ணம்மா இருவரும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகினறனர். இப்போது இவர்களுக்கு இடையில் மோதல் இருந்தாலும் அது காமெடியாகவே முடிவது ரசிகர்களிடையெ சலிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலை எப்போது மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், சீரியலில் எதிர்பார்ப்பை அதிகரிக்க புதிக கதாப்பாத்திரமாக வாய்தா வடிவுககரசி ரோலில் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா அறிமுகமாகியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்று கூறி கண்ணம்மாவுக்கு ஆதரவாக பாரதியிடம் நிஷா சண்டை போடுவது காமெடியாக உள்ளது.
இதில் கண்ணம்மா வீட்டின் பக்கத்திலேயே நிஷாவும் குடியேறியுள்ளார். இதுவரை போரிங்காக சென்றுகொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நிஷா என்ட்ரியால் சற்று விறுவிறுப்பாக மாறியுள்ளது. ஆனால் கூடிய விரைவில், விறுவிறுப்பாக திரைக்கதைக்கு வந்து சீரியலை வேகம் கூட்டினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்ள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் தற்போது வெண்பாவும் சீரியலுக்கு திரும்பியுள்ளதால், அடுத்து வரும் எபிசொடுகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“