Bharathi Kannamma Serial New Akilan Entry : இல்லத்தரசிகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது தொலைக்காட்சி சீரியல்கள். சின்னத்திரையில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ள சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் அவர்களின் ஒரிஜினல் பெயரை விட சீரியலில் அவர்கள் நடித்து வரும் கேரக்டர் பெயர்களே ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தி வருகினறனர்.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ரோஷ்னி ஹரிப்பிரியன், அருண்பிரசாத், ஃபரீனா ஆசாத், ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலில் பாரதியின் தம்பி மற்றும் அஞ்சலியின் கணவன் அகிலன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகரான அகிலன், கடந்தமாதம் திடீரென சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், அகிலனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், அவரால் சீரியலில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தொடரில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இவர் தற்போது விஷால் நடிப்பில் ஒருவாகி வரும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அகிலன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சுகேஷ் நடித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அகிலனின் எபிசோடுகள் இதுவரை வெளியாகாத நிலையில், நேற்று முதல் (செப்டம்பர் 01) அகிலன் கதாப்பாத்திரத்தில் சுகேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் கதாப்பாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில், அந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த அகிலனுக்கும் ரசிகர்கள் ஏராளம். ஆனால் தற்போது இந்த கதாப்பாத்திரத்திற்கு அகிலன் மாற்றப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், புதிதான வந்துள்ள சுகேஷ் அகிலன் கதாப்பாத்திரத்தை பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil