Bhararthi Kannamma New Promo And New Actress : சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் வழங்குவதில் விஜய் டிவி முன்னணியில் உள்ளது. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு கதைதான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டாலும் மற்றொரு காரணம் அனைத்து சீரியலின் தலைப்பு. தமிழில் ஹிட்டடித்த படங்களின் டைட்டிலை பயன்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சிரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுகினறன.
Advertisment
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நாள் தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரோஷினி, அருண்பிரசாத் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தனது குழந்தையுன் வாழ்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வாழ்வியலை அடிப்படையான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில் திடீர் திருப்பமான கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கண்ணம்மா கேரக்டரில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் இல்லதரசிகளின் மனதை வென்ற ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலக காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் பலரும் ஆராய்ந்து வரும் நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதிவரை ரோஷினி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கையும் வைத்து வந்தனர்.
ரோஷினி விலகிவிட்டாலும், அவர் நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இன்றுடன் (நவம்பர் 13) அவர்கள் நடித்த அனைத்து எபிசோடுகளும் முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை முதல் (நவம்பர் 15) ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடிக்க உள்ளார். மாடலிங் மூலம் மீடியாவில் அடியெடுத்து வைத்துள்ள வினுஷா தேவி, தமிழில் விரைவில வெளியாக உள்ள என்4 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதனைத் தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வரவுள்ள பாரதி கண்ணம்மா எபிசோடு குறித்த ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்து. இந்த ப்ரமோவில் பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களும் வினுஷா தேவி நடிப்பில் ரீகிரியேட் செய்தது போல காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ரோஷினியே இறுதிவரை நடிக்க வேண்டும் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil