வெண்பா கழுத்தைப் பிடித்து... அந்நியன் ஸ்டைலில் அதிரடி காட்டும் கண்ணம்மா!
Tamil Serial Update : ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது
Tamil Serial Update : ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது
Bharathi Kannamma New Promo : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பாரதி வெண்பாவின் சூழ்ச்சியினால் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு விரட்டுகிறான்.
Advertisment
நிறைமாத கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களில் இரட்டை குழந்தை பெற்றொடுக்கிறாள். அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவின் மாமியார் எடுத்துச்சென்று வளர்த்து வருகிறார். இதற்கிடையெ ஒரு குழந்தையுடன் இருக்கும் கண்ணம்மா பல வேலைகளை செய்து தனது குழந்தையை வளர்த்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்று தெரிந்துகொள்ளும் கண்ணம்மா தனது இன்னொரு குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள். இதை தெரிந்துகொள்ளும் வெண்பா இன்னொரு குழந்தை தன்னிடம் தான் உள்ளது என்றும், அவள் உனக்கு வேண்டும் என்றால் பாரதியை டைவர்ஸ் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள்.
இதனால் அதிர்ச்சியடையும் கண்ணம்மா வேறு வழியின்றி டைவர்ஸ் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறாள். கடந்த சில வாரங்களாக இது தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் ஒரு சிலர் கண்ணம்மா வெண்பாவிடம் கெஞ்சுவது குறித்து விமர்சனங்களை பதிவிட்டிருந்தனர். ஆனாலும் கடந்த வார இறுதிவரை இதே எபிசோடுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
Advertisment
Advertisements
ஆனால் தற்போது ஹேமாதான் உனது மகள் என்று சௌந்தர்யா கண்ணம்மாவிடம் சொல்லிவிடுகிறார். தற்போது தனது குழந்தை எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொண்ட கண்ணம்மா, வெண்பா தன்னிடம் பொய் சொல்லி அலைவிட்டிருக்கிறாள் என்பதை புரிந்துகொள்கிறாள். இதன்பிறகு என்ன நடக்கும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
தற்போது ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போடுவது குறித்து வெண்பா கேட்க, அதற்கு கண்ணம்மா அந்நியன் விக்ரமை போல மாறி மாறி பேசி வெண்பாவை வெறுப்பேற்றுகிறார். இதனால் கடுப்பாகும் வெண்பா அங்கிருந்து கிளம்பிவிடும் நிலையில், இது வெறும் டிரெய்லர்தான்மா இனிமே என்னலாம் பண்ணப்போறேன் பாரு என்று கண்ணம்மா நினைக்கிறாள். அத்துடன் இந்த ப்ரமோ முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil