Tamil Serial Bharathi Kannamma New Promo : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது சீரியல்கள். இதில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் முன்னணியில் இருந்து வருகிறது. நல்லகதை விறுவிறுப்பான எபிசோடுகள் என சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகினறன. அந்த வகையில் தினசரி எபிசோடுகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுத்தி வருவது பாரதி கண்ணம்மா.
Advertisment
விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சிறுவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் ரசித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு பணக்கார குடும்பத்தில் தனது வாழ்க்கையை தொடங்குகிறாள். ஒரு கட்டத்தில் அவள் தாய்மை அடையும்போது அதுவே அவளுக்கு பிரச்சனையாக மாறுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறும் அவள் தனி ஆளாக எப்படி தனது வாழ்க்கை முன்னேற்றுகிறாள் என்பதே சீரியலின் கதை.
இதில் கண்ணம்மாவாக வினுஷா ஸ்ரீ (முன்பு ரோஷ்னி ஹரிப்பிரியன்) பாரதியாக அருண்பிரசாத் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் தற்போது கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த வாரம் முழுவதும் இது தொடர்பான காட்சிகளே ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த எபிசோடு குறித்த ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாரதி மற்றும் கண்ணம்மா விவாதங்களை கேட்டறியும் நீதிபதி உங்களுக்குள் புரிதல் இல்லாததே நீங்கள் பிரிவதற்கு முக்கிய காரணம். இதனால் பாரதி கேட்ட விவாகரத்தை கொடுக்க முடியாது. நீங்கள் இருவரும் 6 மாதகாலம் ஒன்றாக வாழவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார். இதை கேட்டு கண்ணம்மா சந்தோஷப்பட, பாரதி கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார்.
Advertisment
Advertisements
அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. தற்போது சமூகவலைதளங்களில் இந்த ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நல்ல தீர்ப்பு என்று கூறி வருகின்றனர். இதனால் இந்த எபிசோடுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil