Bharathi Kannamma New Promo Update : தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதுவும் கடந்த லாக்டவுன் காலத்தில் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றே கூறாலம். அந்த சமயத்தில் படங்கள் எதுவும் தியேட்டரில் வெளியாகமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். ஆனாலும் சுமார் இரண்டரை மணி திரைப்படத்தில் இருக்கும் சுவாரஸ்யத்தை விட நாள்தோறும் அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் சீரியல் எப்சோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
Advertisment
அந்த வகையில் மக்கள் மத்தியில் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. தொடக்கத்தில் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு இல்லாத இந்த சீரியல் போக போக ரசிகர்களின் பிடித்தமான சீரியல்களில் ஒன்றாக ஆகிவிட்டது. அதன் காரணமாக இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது வராந்தோறும் சீரியலில் அடுத்தடுத்து பல ட்விட்ஸ்ட்கள் அரங்கேறி வருகின்றன.
மாற்றி மாற்றி சீரியலில் நிறைய டுவிஸ்ட்கள் வருவதால், மக்கள் ஆர்வத்துடன் சீரியலை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சீரியலில் சீமந்த நிகழ்ச்சி நடக்கிறது, அந்நிகழ்ச்சிக்கு பாரதி, கண்ணம்மா, ஆகியோர் வந்துள்ளனர். வெண்பா அஞ்சலிக்கு போன் செய்து கேட்டு தானாக இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார். இது கடந்த எபிசோடுகளில் காட்டப்பட்டது. தற்போது வெளியாகிஇருக்கும் பரமோவில், அஞ்சலி ஒரு பெரிய ட்விஸ்ட்க்கு விடை சொல்லியுள்ளார்.
இந்த ப்ரமோவில் அனைவரும் அஞ்சலிக்கு நலங்கு வைக்கின்றனர். அப்போது சௌந்தர்யா பாரதியை அழைக்கும்போது அவனுடன் வெண்பாவும் வருகிறாள். அப்போது அஞ்சலி திருமணம் ஆகாதவர்கள் நலங்கு வைக்க கூடாது என்று சொல்கிறாள். இதை கேட்டு கண்ணம்மா ஷாக் ஆக அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதுவரை பாரதி வெண்பாவை திருமணம் செய்துகொண்டதாக நம்பிக்கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு இந்த தகவல் பெரும் அதிச்சியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
தற்போது இந்த பிரமோ வைரலாகி வரும் நிலையில், இந்த எபிசோடு எப்போது வரும் என்று காத்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil