Bharathi Kannamma Serial Update : விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தன்னுடன் படித்த சக நண்பன் மீது கொண்ட ஒரு தலை காதலால் தோழி ஒருவர் செய்யும் சூழ்ச்சியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாரதி, கண்ணம்மா, வெண்பா ஆகிய 3 கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வெண்பா செய்யும் சூழ்ச்சியால் பாரதி தனது மனைவி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பிரிந்து விடுகிறார்.
Advertisment
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்த இரு வாரங்களாக இருவரும் மீண்டும் இணைவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்த இந்த சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் இணையப்போவதாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தற்போது அதற்கு மாறாக மீண்டும் பாரதி கண்ணம்மா இடையே மோதல் தொடங்கியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை மலையாளத்தில் வெளியான கருத்த முத்து என்ற சீரியலை தமிழில் பாரதி கண்ணம்மா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளில் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழுக்கு முன்பே மற்ற மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது.
அந்த வகையில் தற்போது தெலுங்கில் கார்த்திகா தீபம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், வெண்பா கதாப்பாத்திரம் பற்றிய உண்மையை தெரிந்துகொண்ட பாரதி கதாப்பாத்திரம் இது குறித்து வெண்பாவிடம் கேட்கிறார். அப்போது வெண்பா கதாப்பாத்திரம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த கர்ப்பத்திற்கு பாரதி கதாப்பாத்திரம்தான் காரணம் என்று சொல்வது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இது எப்படி என்றால் கண்ணம்மா கதாப்பாத்திரத்திற்கு பிறந்த இரட்டை குழந்தை தன்னுடையதா என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது. அப்போது பாரதியின் உயிரணுவை கைப்பற்றும் வெண்பா கதாப்பாத்திரம் அதை வைத்து தான் கர்ப்பமானதாக கூறுகிறார். இந்த கடந்த ஆகஸ்ட் 9 மற்றும் 10-ந் தேதிகளில் தெலுங்கில் வெளியான எபிசோடுகளில் இடம்பெற்றுள்ளது.
இதனால் தற்போது தமிழிலும் விரைவில் இதே காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாரதி கண்ணம்மாவில் வெண்பா கதாப்பத்திரத்தில் நடித்து வரும் ஃபரீனா ஆசாத் தற்போது கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil