Tamil Serial Bharathi Kannamma Episode : நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், கண்ணம்மாவிற்கு உடம்பு முடியவில்லை என்பதால் கண்ணம்மா லக்ஷ்மி இருவரும் பாரதியை பார்க்க வருகின்றனர். அங்கு கண்ணம்மா தனக்கு உடம்பில் எதுவும் இல்லை இதயத்தில் தான் பிரச்சனை என்று சொல்கிறாள. இதை கேட்டு சிரிக்கும் பாரதி உடம்பி்ற்கு ஒன்றும் இல்லை என்று கூறி மருந்து எழுதி கொடுக்கிறான். அதற்கு கண்ணம்மா உடம்பில்தான் ஒன்றும் இல்லையே என்று கேட்கிறாள்.
அதற்கு பாரதி இதுக்கு மேல நடக்கரத எல்லாம் பார்த்து உன் இதயம் தாங்கனும் அதுக்குதான் இந்த மருந்து என்று சொல்லி, இன்று நல்ல நாள் திருமணம் செய்யவும் விவாகரத்து செய்யவும் என சொல்ல கண்ணம்மா எதுவும் புரியாமல் இருக்கிறாள். இதற்கிடையே ஜெயிலில் வெண்பாவை சந்திக்கும் வக்கீலிடம், சீக்கிரமாக என்னை வெளியே எடுங்க என சொல்ல, முயற்சி செய்கிறேன் என சொல்லும் வக்கீல் இன்னும் 15 நாட்களுக்கு அப்படி தான் இருக்கும் அதுக்கு அப்பறம் உங்களை வந்து பார்க்கிறேன் என வக்கீல் கிளம்புகிறார்.
இந்நிலையில், கண்ணம்மா வீட்டிற்கு கோர்ட்டில் இருந்து கூரியர் வந்துள்ளதாக கொடுத்து விட்டு செல்கிறார். அதை பிரித்து பார்க்கும் கண்ணம்மா விவாகரத்து வக்கீல் நோட்டீஸ் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். அப்போது பாரதி சொன்னதை நினைத்துப்பார்க்கிறார். அதன்பிறகு கதறி அழும் கண்ணம்மா எனக்கு ஏன் இவ்வளவு சோதனை செய்யாத தப்பிற்கு நான் எவ்வளவு தண்டனை அனுபவிப்பது என புலம்புகிறாள்
இதனையடுத்து வெண்பாவை சிறையில் சந்திக்கும் பாரதி நீ வசதியாக வளர்ந்த பொண்ணு இங்க இருக்க கஷ்டமாக தான் இருக்கும் என பாரதி சொல்கிறார். எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம் என வெண்பா சொல்ல, இப்போது கண்ணம்மாவை விவாகரத்து செய்ய இருக்கிறேன் என பாரதி சொல்கிறான் இதை கேட்டு வெண்பா சந்தோசமாக இருக்கிறார். இதை உன் அம்மா அப்பா இதை ஏற்றுக் கொள்வார்களா என கேட்க அவங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் என்னுடைய முடிவு இது தான் என பாரதி சொல்கிறார்.
இதனிடையே வீட்டில், சௌந்தர்யாவிடம் பேசும், பாரதி, நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன் என சொல்ல, சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். மனத்திற்குள்ளையே போட்டு கஷ்டப்படுவதை விட வெளியே சொல்வது சரி தான் என சொல்லி, கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன் என சொல்கிறார். இதை கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சியடைய அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil