Tamil Serial: கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி; ரொமான்ஸ் ஆரம்பிச்சிட்டாங்கடோய்..!
Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலில் பிரிந்து இருக்கும் இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்
Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலில் பிரிந்து இருக்கும் இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்
Bharathi Kannamma Promo Update : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. வாரந்தோறும் வெளியாகி வரும் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடம் பிடித்து வரும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி கண்ணம்மா இருவரும் ஒன்றினையும் நிகழ்வு தான்.
Advertisment
ஹேமாவின் உடல்நிலைக்காக அவளை கண்ணம்மாவின் வீட்டில் விட்டு வரும் பாரதி அடிக்கடி அவளை பார்ப்பதற்காக அங்கு செல்கிறான். அப்போது கண்ணம்மாவிடம் வாழ்ந்த பழைய ஞாபகங்களை நினைத்து பார்க்கும் பாரதி அவளிடம் பேசுவதற்காக ஏங்குவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா மற்றும் இரு குழந்தைகளும் ஒரே வீட்டில் அமர்ந்து சாப்பிடுவது போல புகைப்படம் வெளியாகியது.
இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கட்சி எப்போது வரும் என்று எதிர்பார்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ரசிகர்களின் காத்திருப்புக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ப்ரமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இநத ப்ரமோவில், கண்ணம்மா வீட்டில் இருந்து ஹான்பிட்டலுக்கு செல்லும் பாரதி மீது ஒரு வண்டி சேரை அடித்துவிட்டு சென்கிறது.
அதன்பிறகு ஹேமா லட்சுமி இருவரும் பாரதியை கண்ணமா வீட்டிற்கு அழைத்து சென்று நடந்ததை கூறுகின்றனர். அப்போது கண்ணம்மா பாரதி குளிக்க சொல்கிறாள். அதன்பிறகு குளித்து விட்டு வரும பாரதி சாப்பிட அமர்கிறான். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.
Advertisment
Advertisements
பிரிந்து இருக்கும் இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ப்ரமோ விறுவிறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த இப்ரமோ வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil