Bharathi Kannamma Promo Update : விஜய் டிவியின் ரசிகர்கள் மனம் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் குறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த சில வாரங்களாக லக்ஷ்மி அம்மா யார்? அதனைத் தொடர்ந்து பாரதி வெண்பா திருமணம் நடைபெற்றதா? ஹேமாவின் அம்மா யார்? கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை ரகசியம் என பல கேள்விகளுக்கு விடை சொல்லும விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டது.
தற்போது ஹேமாவின் அம்மா யார் என்பது கண்ணம்மாவுக்கு இன்னும் தெரியாத நிலையில், அடுத்து வரும் எபிசோடுகளில் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் வெண்பாவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற உண்மை அஞ்சலி வெளி கொண்டு வந்ததால பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சாப்பிட அமர்ந்துள்ளனர்.
இதில் பாரதி பக்கத்தில் லக்ஷ்மியும், கண்ணம்மா பக்கத்தில் ஹேமாவும் அமர்ந்துள்ள நிலையில், தான் கண்ணம்மா பக்கத்தில் அமர்ந்துள்ளது தெரிந்து உடனடியாக எழுந்திருக்கிறான் பாரதி. ஆனால் அனைவரும் சமானதாப்படுத்தி அவனை கண்ணம்மா பக்கத்தில் அமர வைக்கின்றனர். அத்துடன் நேற்றைய எபிசோடு முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவில் கண்ணம்மாவின் வில்லத்தனம் வெளிப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், தனக்கு எதிர் திசையில் அமர்ந்திருக்கும் வெண்பாவை வெறுப்பேற்றும் வகையில் கண்ணம்மா பாரதியுடன் ஒட்டிக்கொண்டு பேசுகிறார். அவனுக்கு அப்பளம் எடுத்து வேண்டுமா என்று கேட்கிறார். இதை பார்த்து கடுப்பாகும் வெண்பா தனது சாப்பாட்டில் உள்ள அப்பளத்தை நொருக்குகிறாள். மேலும் சொந்த பொண்டாட்டி மாதிரி சீன் போட்டல இப்போ பாரு உன்ன வெறுப்பேத்துறேன் என்று கண்ணம்மா நினைத்துக்கொள்கிறாள். தற்போது இந்த ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ணம்மா வில்லத்தனம் என்று பதிவிட்டு வருகின்றனர். பாரதிக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்ததும் கண்ணம்மா வின் சந்தோஷம் அருமை என்றும், கண்ணம்மா கு கலைமாமணி அவார்ட் குடுக்கலாம்.. ஆல் ஆக்ட்டிங் சூப்பர் மேட்சிங் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil